கடந்த ஜூலை மாதம் பிரமாண்டமாக மும்பையில் நடைபெற்றது ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஷாருக் கான் வரை பல திரை பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்களும் அம்பானி வீட்டுத் திருமணத்தில் முகாமிட்டிருந்தனர். இத்தனை நட்சத்திரங்கள் உலகப்பணக்காரரின் வீட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்டதால் பாலிவுட் நடிகர்களுக்கு அம்பானி திருமணத்தில் கலந்துகொள்ளப் பணம் கொடுக்கப்பட்டது எனச் செய்திகள் கிளம்பின.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே. ஆனந்த் அம்பானியும் ராதிகாவும் தனது நண்பர்கள் என்பதாலேயே திருமணத்துக்குச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
“ஏன் மக்கள் இப்படி நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. மணமக்கள் என்னுடைய நண்பர்கள். என் நண்பர்கள் திருமணத்தில் நான் கலந்து கொண்டு நிச்சயமாகச் சிறப்பாக நடனமாடுவேன்.” எனப் பேசியிருந்தார் அனன்யா பாண்டே.
“அங்கே என்னென்ன நடந்தாலும், எப்போதும் ஆனந்தும் ராதிகாவும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்குப் பின்னால் வயலின் வாசிப்பதைப் போல இருக்கும். என் வாழ்க்கையிலும் அப்படி ஒன்று வேண்டுமென்று நினைக்கிறேன். சுற்றி என்ன நடந்தாலும் அந்த ஒருவருடன் மற்றும் ஒரு இணைப்பு இருக்கும்” என ஆனந்த் அம்பானி, ராதிகாவின் காதலை மெச்சினார் அனன்யா.
“அவர்கள் எல்லாரையும் சிறப்பாக வரவேற்றனர். எத்தனை நிகழ்வுகள் நடைபெற்றாலும், வரும் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்றனர். அனைவரையும் நெருக்கமாக உணர வைப்பது ஒரு அழகான பண்பு…” என அம்பானி குடும்பத்தின் வரவேற்பை வியந்தார் அனன்யா.
பல பிரமாண்டமான விழாக்களுக்குப் பிறகு ஜூலை 12ல் அம்பானி வீட்டுத் திருமணம் நடைபெற்றது. பல திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அம்பானி திருமணம் குறித்த பேச்சு இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX