⚡ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கோவில்… பவானி அம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5677188 cropped 01012026 221037 inshot 20260101 220510075 2 3x2 Thedalweb ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கோவில்... பவானி அம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 03, 2026 10:25 AM ISTநீலகிரியில் பவானி நதி தோன்றும் இடத்தில் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் பவானி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.+ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கோவில்..

2
பவானி அம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்…புத்தாண்டு தின விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது

3
நேற்று நள்ளிரவு முதல் துவங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு நேரங்களில் கேக் வெட்டி கொண்டாடுவதும், பட்டாசுகள் வெடிப்பதும், காலை நேரங்களில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதும் தனி சிறப்பு.அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வழிபாட்டிற்காக
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 03, 2026 10:25 AM ISTநீலகிரியில் பவானி நதி தோன்றும் இடத்தில் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் பவானி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.+ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…


Last Updated:

நீலகிரியில் பவானி நதி தோன்றும் இடத்தில் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் பவானி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

+

ஆண்டுக்கு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கோவில்… பவானி அம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்…

புத்தாண்டு தின விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் துவங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு நேரங்களில் கேக் வெட்டி கொண்டாடுவதும், பட்டாசுகள் வெடிப்பதும், காலை நேரங்களில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதும் தனி சிறப்பு.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த ஆன்மிக ஸ்தலமாக உள்ளது பவானி அம்மன் கோவில்.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து காவிரி நதியில் கலக்கிறது. இந்தக் கோயிலுக்குப் பின்னால் ஓடும் ஓடை, மேல் பவானி அணையின் முக்கிய நீர் ஆதாரமாகும். இந்தக் கோயில் லட்சுமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது முதலில் மேல் பவானி அணை கட்டப்பட்டபோது கட்டப்பட்டது. உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை வழிபட்டு, அமாவாசை நாட்களில் வருகை தருகின்றனர்.

இன்றைய தினம் அவலாஞ்சி அணை சுற்றுலா தளத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அங்குள்ள வனத்துறையின் வாகனங்கள் அனைத்தும் உள்ளூர் மக்களை கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிக்கப் வாகனங்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் அடிவாரத்திலிருந்து கோவில் வரையிலும் மக்களை ஏற்றி சென்றனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இன்றைய தினம் இந்த கோவிலில் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது அறிந்து வழிபாடு செய்வதற்காக புத்தாண்டு தினத்தில் இங்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இயற்கையான நீரோடை அருகே சாந்தமான நிலையில் அமர்ந்துள்ள பவானி அம்மன் கோவில் நீலகிரியின் இயற்கையின் அடையாளமாகவும், சக்தி வாய்ந்த கடவுளாகவும் கருதப்படுகிறது. இதற்காகவே வருடத்திற்கு ஒருமுறை ஏராளமான மக்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது.

இந்த கோவிலில் மக்கள் வருகை குறித்து சோம்நாத் மற்றும் சோமேஷ் கூறுகையில், “பவானி அம்மன் கோவில் வருடத்திற்கு ஒருமுறை வழிபாடு நடைபெறுகிறது. வழிபடுவதற்காக இன்றைய தினம் ஏராளமான மக்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும் பவானி நதியின் துவக்கமே இங்கிருந்துதான் துவங்குகிறது. இதன் பின்புறத்தில் ஒரு ஓடைகள் மற்றும் நீர்நிலைகள் முதுமலை வனப்பகுதிகளை சென்றடைகிறது.

இதன் எதிர்புறத்தில் ஊசிமலை எனப்படும் முருகர் கோவிலும் அமைந்துள்ளது. இயற்கையான சூழலில் இந்த கோவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இன்றைய தினம் உள்ளூர் மக்கள் வருகைக்காக வனத்துறையினரும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எதிர்பார்த்த அளவை விட அதிகமான மக்கள் கூட்டம் இன்று வருகை புரிந்துள்ளார்கள்” என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 02 56d89073b9964cf84b50afe61a8feb5f Thedalweb Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வகையில், அறிவுக்கு அதிபதியான புதனும் (நாராயணன்), செல்வத்திற்கும் போகித்திற்கும் அதிபதியான…

Maha shivarathri 2026 02 9def1a107dc0d8d9e13a92fec78ba299 Thedalweb Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

📌 Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Rasi palan | இந்த ஆண்டு, மஹாசிவராத்திரி 300 ஆண்டுகளுக்குப்…