✅ ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி தேரோட்ட திருவிழா கோலாகலம்.. பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து சென்ற பக்தர்கள்! | ஆன்மிகம்

✍️ |
Car Festival 2026 01 bdb63c840d60fd300a189f0fc3ec9619 3x2 Thedalweb ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி தேரோட்ட திருவிழா கோலாகலம்.. பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து சென்ற பக்தர்கள்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 02, 2026 8:06 AM ISTஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆத்மநாதா மாணிக்கவாசக முழக்கங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டம்புதுக்கோட்டை மாவட்டம் ஆத்மநாதர்சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்ட திருவிழா விமரிசையாக நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவாசகம் பிறந்த (திருப்பெருந்துறை) எனும் ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது

2
இக்கோயிலில் ஆனிதிருமஞ்சன திருவிழா மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா என ஆண்டுக்கு இருமுறை தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்

3
அதன் அடிப்படையில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஒன்பதாம் நாளான இன்று மாணிக்கவாசகப் பெருமான் மா பலா வாழை என
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 02, 2026 8:06 AM ISTஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆத்மநாதா மாணிக்கவாசக முழக்கங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டம்புதுக்கோட்டை மாவட்டம் ஆத்மநாதர்சுவாமி கோயிலில்…


Last Updated:

ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆத்மநாதா மாணிக்கவாசக முழக்கங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்
தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆத்மநாதர்சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்ட திருவிழா விமரிசையாக நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவாசகம் பிறந்த (திருப்பெருந்துறை) எனும் ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆனிதிருமஞ்சன திருவிழா மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா என ஆண்டுக்கு இருமுறை தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒன்பதாம் நாளான இன்று மாணிக்கவாசகப் பெருமான் மா பலா வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் சிவனடியார்களும் திருத்தேரோட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.மேலும் அனைத்து திருக்கோயில்களிலும் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆனால் இந்த கோவிலை பொருத்தவரை ஆத்மநாதர்சுவாமியின் தொண்டரான மாணிக்கவாசகர் திருத்தேரில் எழுந்தருளி காட்சி தரக்கூடிய சிறப்பு இந்த கோயிலில் உள்ளது.

இந்த தேரோட்ட திருவிழாவில் கயிலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சிவனடியார்கள் ஆத்மநாதா மாணிக்கவாசகா பக்தி கோஷங்களை எழுப்பி திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி டிஎஸ்பி சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி தேரோட்ட திருவிழா கோலாகலம்.. பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து சென்ற பக்தர்கள்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 3 2026 01 302411f865bc8c04ceb17d0f7d1eaade Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு, இன்று சாதகமான நாளாக இருக்கும் 2 உங்களைச்…

HYP 5721932 thaipusam2026viralimalaimurugantemple 7 Thedalweb தைப்பூசம் வந்தாச்சு - விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது...

✅ தைப்பூசம் வந்தாச்சு – விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது…

📌 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. Source link புதுக்கோட்டை…