📌 உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05 | technical shots used in cinema explained

✍️ |
உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05 | technical shots used in cinema explained
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சினிமா என்​பது வெறும் காட்​சிகளின் தொகுப்பு அல்ல

2
அது பார்​வை​யாளரின் மனதை குறிப்​பிட்ட திசை​யில் இழுத்​துச் சென்று உணர்ச்​சிகளைத் தூண்​டும் ஒர் அற்​புதக் கலை

3
ஒரு காட்​சியை எந்​தக் கோணத்​தில் படமாக்​கு​கிறோம் என்​பதே அதன் உள்​மனத் தாக்​கத்​தை​யும், கதை​யின் போக்​கை​யும் தீர்​மானிக்​கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒளிப்​ப​தி​வாளரின் காட்​சிப் பார்​வை​யானது இதயத்​தில் ஒலிக்​கும் மென்​மை​யான குரல் போன்​றது – அது பார்​வை​யாளரின் உணர்​வு​களை உயர்த்​தலாம், தாழ்த்​தலாம் அல்​லது குழப்​பத்​தில் ஆழ்த்தலாம்

5
சிட்டிசன் கேன் உயர​மும் தாழ்​வும் – உணர்​வு​களின் மாற்​றம்: ஹை ஆங்​கிள் ஷாட்​டு​கள் மற்​றும் லோ ஆங்​கிள் ஷாட்​டு​கள், மனித உணர்​வு​களை எதிரெ​திர் திசைகளில் மாற்​றும் சக்தி வாய்ந்த கருவி​கள் எனலாம்

📌 சினிமா என்​பது வெறும் காட்​சிகளின் தொகுப்பு அல்ல. அது பார்​வை​யாளரின் மனதை குறிப்​பிட்ட திசை​யில் இழுத்​துச் சென்று உணர்ச்​சிகளைத் தூண்​டும் ஒர் அற்​புதக் கலை. ஒரு காட்​சியை எந்​தக் கோணத்​தில் படமாக்​கு​கிறோம் என்​பதே அதன் உள்​மனத் தாக்​கத்​தை​யும்,…


சினிமா என்​பது வெறும் காட்​சிகளின் தொகுப்பு அல்ல. அது பார்​வை​யாளரின் மனதை குறிப்​பிட்ட திசை​யில் இழுத்​துச் சென்று உணர்ச்​சிகளைத் தூண்​டும் ஒர் அற்​புதக் கலை. ஒரு காட்​சியை எந்​தக் கோணத்​தில் படமாக்​கு​கிறோம் என்​பதே அதன் உள்​மனத் தாக்​கத்​தை​யும், கதை​யின் போக்​கை​யும் தீர்​மானிக்​கிறது. ஒளிப்​ப​தி​வாளரின் காட்​சிப் பார்​வை​யானது இதயத்​தில் ஒலிக்​கும் மென்​மை​யான குரல் போன்​றது – அது பார்​வை​யாளரின் உணர்​வு​களை உயர்த்​தலாம், தாழ்த்​தலாம் அல்​லது குழப்​பத்​தில் ஆழ்த்தலாம்.

17623314942006 Thedalweb உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05 | technical shots used in cinema explained
சிட்டிசன் கேன்

உயர​மும் தாழ்​வும் – உணர்​வு​களின் மாற்​றம்: ஹை ஆங்​கிள் ஷாட்​டு​கள் மற்​றும் லோ ஆங்​கிள் ஷாட்​டு​கள், மனித உணர்​வு​களை எதிரெ​திர் திசைகளில் மாற்​றும் சக்தி வாய்ந்த கருவி​கள் எனலாம். ஆர்​சன் வெல்ஸ் இயக்​கிய ‘சிட்​டிசன் கேன்’ (Citizen Kane 1941) என்ற ஹாலிவுட் திரைப்​படத்​தில், லோ- ஆங்​கிள் காட்​சிகள், கதா​பாத்​திரத்​தின் அதி​காரத்​தை​யும் ஆணவத்​தை​யும் அழகாக வெளிப்​படுத்​தின.

கேமரா தரையி​லிருந்து மேல்​நோக்​கிப் பார்க்​கும் போது, நாயகன் ஒரு மாபெரும் ஆளு​மை​யாகத் தோற்​றமளிப்​ப​தால் பார்வையாளரின் மனதில் அந்த உணர்வு ஆழமாகப் பதி​கிறது. மாறாக, உயர்ந்த கோணங்​கள், மனித மனத்​தின் அச்​சத்​தையோ, தளர்ச்​சி​யையோ அல்​லது சிக்​கலான மனநிலை​யையோ தெளி​வாகக் காட்​டு​கின்​றன. இவை பார்​வை​யாளரை கதா​பாத்​திரத்​தின் பலவீனத்​துடன் இணைக்​கும்.

17623314712006 Thedalweb உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05 | technical shots used in cinema explained
பாரசைட்

சமத்​து​வத்​தின் பார்வை – பாரசைட் உதா​ரணம்: பொங் ஜூன் ஹோவின் ‘பாரசைட்’ (2019) திரைப்​படம், சமூக அடுக்​கு​களை கேமரா கோணங்​களின் வழியே அற்​புத​மாகச் சித்​தரித்​தது. செல்​வந்​தர்​களின் வீடு, உயரத்​தில் அமைந்​திருப்​பது போல​வும், ஏழைகளின் வீடு அடித்​தளத்​தில் இருப்​பது போல​வும் காட்​சிகள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. இது காட்சி அடுக்​கு​களாக​வும், சமூக அடுக்​கு​களாக​வும் இணைந்து செயல்​படு​கின்​றன.

ஆனால், உணர்வு ரீதி​யாக செல்​வந்​தர்​கள் ‘கீழே’ இருப்​பதை இப்​படம் நுட்​ப​மாகக் காட்​டு​கிறது; அவர்​கள் உண்​மை​யில் உள்​ளத்​தில் நிலைகுலைந்​தவர்​கள். மாறாக, ஏழை குடும்​பம் ஒன்​றாக உணவருந்​தும் காட்​சிகள் கண் மட்​டக் கோணத்​தில் படமாக்​கப்​பட்​டுள்​ளன. இது சமத்​து​வம், உறவு மற்​றும் மனிதத்​தன்​மையை அழகாக வெளிப்​படுத்​துகிறது. இந்​தக் கோணம் பார்​வை​யாளரை அந்​தக் குடும்​பத்​துடன் நெருக்​க​மாக இணைக்​கிறது.

மலை​யாள சினி​மா​வின் கலைந​யம்: மலை​யாளத் திரைப்​படங்​களில் கேமரா கோணங்​கள் மூலம் மனித உணர்​வு​கள், மிக​வும் கலைநய​மாக வெளிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ‘ஒரு வடக்​கன் வீரக​தா’ (1989) திரைப்​படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் ராமச்​சந்​திர பாபு, வீரத்​தின் பெரு​மை​யை​யும் உள்​ளக் கிளர்ச்​சி​யை​யும் தாழ்ந்த கோணங்​கள் மூலம் அற்​புத​மாகக் காட்​டி​னார். சூரிய ஒளி, வாளின் பிர​காசம், முகத்​தில் வழி​யும் வியர்வை – இவை அனைத்​தும் தாழ்ந்த கோணங்​களின் வழியே, போரின் அசலான உணர்ச்​சிகளைப் பார்​வை​யாளரின் இதயத்​தில் பரப்​பு​கின்​றன.

அதே​போல், ‘வைஷாலி’ (1988) திரைப்படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் மது அம்​பட் பயன்​படுத்​திய டைனமிக் கோணங்​கள் மூலம் புராணக் காதல் காட்​சிகள் ஒரு மாய உலகத்தைக் காட்​டின. மேகங்​களின் வழியே மேல்​நோக்​கிய பார்​வை, தரையி​லிருந்து மென்​மை​யாகச் சுழலும் காட்​சிகள்– இவை காதலும் தியாக​மும் கலந்த உணர்​வு​களை மனதை மயக்​கும் வண்​ணம் மிக அழகாக வெளிப்​படுத்​தின.

17623314542006 Thedalweb உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05 | technical shots used in cinema explained
பதேர் பாஞ்சாலி

சத்​யஜித் ரே – மனநிலை​யின் கோணங்​கள்: சத்​யஜித் ரே தனது திரைப்​படங்​களின் கேமரா கோணங்​களை உணர்ச்​சிகளின் மொழி​யாக மாற்​றி​னார். `பதேர் பாஞ்​சாலி’ (1955)​யில், குழந்​தைகளின் பார்​வை​யில் உலகைச் சித்​தரிக்க தாழ்ந்த கண் மட்​டக் கோணங்​களைப் பயன்​படுத்​தி​னார். இது அப்​பட்​ட​மான நிஜத்தை நுணுக்​க​மாக​வும் அழகாக​வும் வெளிப்​படுத்​தி​யது.

‘சா​ருல​தா’​வில் (1964), ஹை ஆங்​கிள் கோணங்​கள் கதா​நாயகி​யின் தனிமை​யை​யும் விரக்​தி​யை​யும் துல்​லியமாகப் பிர​திபலித்​தன. இங்கு கேமரா பார்​வை, கதா​பாத்​திரத்​தின் உள்​ளத்​தின் உண்​மை​யான பிர​திபிம்​ப​மாக மாறியது. ரேயின் திரைப்​படங்​கள் கோணங்​களை வெறும் தொழில்​நுட்​ப​மாக அல்​லாமல், உணர்​வு​களின் கவிதை​யாக உயர்த்​தின.

சப்​ஜெக்​டிவ், ஆப்​ஜெக்​டிவ் மற்​றும் பாயின்ட் ஆஃப் வியூ – மூன்று மனக் கோணங்​கள் ஒளிப்​ப​தி​வின் உள்​மனப் பயணம் மூன்று முக்​கி​யத் திசைகளில் இயங்​கு​கிறது:

1. ஆப்​ஜெக்​டிவ் கேமரா – இது தகவல்​களை நேரடி​யாக அளிக்​கும் பார்​வை. பார்​வை​யாள​ருக்கு ஒரு வெளிப்​புற அனுபவத்​தைத் தரு​கிறது, கதையை தொலை​வில் இருந்து காணச் செய்​கிறது.

2. சப்​ஜெக்​டிவ் கேமரா – இது உணர்ச்​சிகளை நேரடி​யாக அனுபவிக்​கச் செய்​கிறது. கேமரா கோணம் கதா​பாத்​திரத்​தின் மனநிலையை பார்​வை​யாள​ருக்​குள் எளிதாகக் கொண்டு சென்​று, அந்த உணர்​வில் ஆழ்த்​துகிறது.

3. பாயின்ட் ஆஃப் வியூ – இது மேற்​சொன்ன 2 கோணங்​களை​யும் இணைக்​கும் பாலம். கேமரா ஒரு கதா​பாத்​திரத்​தின் பார்​வையை எடுத்​துக்​கொண்​டு, கதை​யின் உள்​முகப் பயணத்தை உரு​வாக்​கு​கிறது.

ஒரு காட்​சியை ஆரம்​பத்​தில் அப்​ஜெக்​டிவ் கோணத்​தில் தொடங்​கலாம். ஆனால் கதை முன்​னேறும்​போது, ஒரு கேமரா இயக்​கம் அல்​லது குளோசப் மூலம் அது சப்​ஜெக்​டிவ் கோண​மாக மாறி பார்​வை​யாளரை உள்ளே இழுக்​கலாம். இந்த மாற்​றம் காட்​சியை உயிரோட்​ட​மாக்​கு​கிறது.

திசை மாற்​றத்​தின் உணர்வு – டச் ஆங்​கிள்: சில நேரங்​களில், சற்று சாய்ந்த கோணங்​கள் மனதின் அமை​தி​யின்​மை​யைக் காட்​டு​கின்​றன. உளவியல் குழப்​பம், பயம் அல்​லது நம்​பிக்​கை​யின்மை போன்ற உணர்​வு​களை இந்​தக் கோணங்​கள் பார்​வை​யாள​ருக்கு கடத்​துகின்​றன. இது கதை​யின் பதற்​றத்தை அதி​கரித்​து, மனதில் ஒரு சிறு திசை​மாற்​றத்தை உரு​வாக்​கு​கிறது.

ஒளிப்​ப​தி​வில் கோணம் என்​பது வெறும் தொழில்​நுட்ப அம்​சம் மட்​டுமே அல்ல – அது ஒரு மனநிலை​யின் வெளிப்​பாடு. கதை​யின் உள்​ளார்ந்த கருத்தை வெளியே கொண்டு வரும் ஒரு அலை போன்​றது. ஒளிப்​ப​தி​வாளர் தன் கேம​ராவை எந்த உயரத்​தில் வைக்​கிறார், எந்​தத் திசை​யில் சுழற்​றுகிறார் என்​பதே கதை​யின் உணர்ச்​சிப் பாதையை நிர்​ண​யிக்​கிறது.

“கோணம்” என்​பது சினி​மா​வின் மவுனக் கவிதை; அது பார்​வை​யாளரின் இதயத்​தில் ஒரு மென்​மை​யான திசை மாற்​றத்தை ஏற்​படுத்​தும் நுட்​ப​மான கலை. ஒவ்​வொரு கோண​மும் ஓர் உணர்​வு, ஒளி, நிழல், மனம்​.

(புதன் தோறும் ஒளி காட்டுவோம்)

cjrdop@gmail.com

முந்தைய அத்தியாயம்: சினிமாவில் வண்ணப்புரட்சி கதையின் மொழியாக நிறம்! | ஒளி என்பது வெளிச்சமல்ல 04

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382231' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்