⚡ கணவர் தர்மேந்திராவிற்காக தனியாக பிரார்த்தனை கூட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஹேமாமாலினி விளக்கம்

✍️ |
கணவர் தர்மேந்திராவிற்காக தனியாக பிரார்த்தனை கூட்டம் நடத்தியது ஏன்? - நடிகை ஹேமாமாலினி விளக்கம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்

2
அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசரமாக இறுதிச்சடங்குகளைச் செய்தனர்

3
நடிகையும், தர்மேந்திராவின் மனைவியுமான ஹேமாமாலினி கூட மயானத்தில் சென்றுதான் தன் கணவர் உடலை கடைசியாகக் காண முடிந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதே போன்று தர்மேந்திராவிற்கு அவர் மகன்கள் மும்பை நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் பிரபலங்களுக்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்தக் கூட்டத்தில் ஹேமாமாலினியோ அல்லது அவரின் இரண்டு மகள்களோ பங்கேற்கவில்லை

5
அதேநாளில் ஹேமாமாலினி தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் தனது கணவருக்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்

📌 பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசரமாக இறுதிச்சடங்குகளைச் செய்தனர். நடிகையும்,…


பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசரமாக இறுதிச்சடங்குகளைச் செய்தனர். நடிகையும், தர்மேந்திராவின் மனைவியுமான ஹேமாமாலினி கூட மயானத்தில் சென்றுதான் தன் கணவர் உடலை கடைசியாகக் காண முடிந்தது. இதே போன்று தர்மேந்திராவிற்கு அவர் மகன்கள் மும்பை நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் பிரபலங்களுக்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஹேமாமாலினியோ அல்லது அவரின் இரண்டு மகள்களோ பங்கேற்கவில்லை. அதேநாளில் ஹேமாமாலினி தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் தனது கணவருக்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் தர்மேந்திராவின் முதல் மனைவி குடும்பத்திற்கும், ஹேமாமாலினி குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியானது.

மகள்களுடன் ஹேமாமாலினி

மகள்களுடன் ஹேமாமாலினி

இது குறித்து விளக்கமளித்துள்ள ஹேமாமாலினி, “‘கணவருக்கு பிரார்த்தனை கூட்டம் நடத்துவது குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம். என்னை சார்ந்தவர்கள் வேறுபட்டவர்கள் என்பதால்தான் எனது வீட்டில் தனியாக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். நான் அரசியலில் இருப்பதால் அரசியல் நண்பர்களுக்காக டெல்லியில் பிரார்த்தனை கூட்டம் நடத்தவேண்டியதாக இருந்தது. எனது தொகுதியான மதுராவில் எனது தொகுதி மக்களுக்காக அங்கும் ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்தினேன்.

நான் செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே” என்றார். புனே அருகில் உள்ள லோனவாலாவில் இருக்கும் தர்மேந்திராவின் பண்ணை வீடு மியூசியமாக மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, “சன்னி தியோல் இது தொடர்பான காரியத்தில் ஈடுபட்டுள்ளார். தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுருக்கும் எனக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது. அனைத்தும் நன்றாக நடக்கிறது. எனவே யாரும் கவலைப்படவேண்டியதில்லை. நாங்கள் நன்றாக இருக்கிறோம். நான் எனது வேலைகளை தொடங்கிவிட்டேன்.

தர்மேந்திராவின் மரணம் எங்களுக்கு ஆற்ற முடியாத அதிர்ச்சியாகும். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். தர்மேந்திராவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அந்த மாதம் ‘பயங்கரமானது’. அவரின் 90வது பிறந்தநாளை கொண்டாட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென அவர் இப்போது எங்களுடன் இல்லை” என்று தெரிவித்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

💡 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

🔥 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…