கார்த்தி 29 அப்டேட்: 'டாணாக்காரன்' தமிழ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?! | karthi's 29th movie shoot update

கார்த்தி 29 அப்டேட்: ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?! | karthi’s 29th movie shoot update


கார்த்தியின் ‘மெய்யழகன்’ இம்மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே அவரின் 29-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கார்த்தியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. ‘கார்த்தி 29’ படத்தை ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்குகிறார். அறிவிப்பு போஸ்டரில் இது ஒரு பீரியட் ஃபிலிம் என உணர்த்தியிருக்கின்றனர்.

கார்த்தி 29கார்த்தி 29

கார்த்தி 29

‘மெய்யழகன்’ படத்தை அடுத்து கார்த்தி, அடுத்து நலனின் இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’, மித்ரனின் இயக்கத்தில் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கமலின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தது போல, கார்த்தியும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அதாவது சூர்யாவின் ‘கங்குவா’வில் கிளைமாக்ஸ் போர்ஷனில் கார்த்தியும் வருகிறார். அது ‘கங்குவா 2’வின் லீட் ஆக இருக்கும் என்றும் சொல்கின்றனர். இந்நிலையில் தான் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சூர்யாவுடன்.. சூர்யாவுடன்..

சூர்யாவுடன்..

இயக்குநர் தமிழின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால், ராமேஸ்வரம் – இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். அந்தக் கதையை தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் சொல்ல, ஆச்சரியமானவர், அப்படியே கார்த்தியிடமும் அதை சொல்லியிருக்கிறார். கதை லைன்களை கேட்ட கார்த்தியும், ஆச்சரியமாகி முழு ஸ்கிரிப்டையும் ரெடி பண்ணச் சொல்லிவிட்டார். இப்படித்தான் ‘கார்த்தி 29’ உருவானது.

நடிகர் கார்த்திநடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

பல மாத செதுக்கல்களுக்கு பிறகு, இப்போது முழுக்கதையையும் ரெடி செய்து விட்டார் தமிழ். அதே சமயம், கார்த்தி இப்போது நடித்து வரும் ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் அது ‘மெய்யழகன்’ போல ஒரு சப்ஜெக்ட் என்ற பேச்சு இருக்கிறது. எனவே அதனை ‘சர்தார் 2’க்கு பிறகு வெளியிடலாம் என்றும், ‘சர்தார் 2’வை அடுத்து கொண்டு வரலாம் எனவும் நினைக்கிறார்கள். ஆகையால், ‘சர்தார் 2’ விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் இரண்டு கெட்டப்களில் கார்த்தி நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டே ‘கார்த்தி 29’ படத்திற்கு வருவார் என்கிறார்கள். அதாவது 29 வது படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் இறுதியில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

நடிகராகவும் ஸ்கோர் செய்து வரும் இயக்குநர் தமிழ், இப்போது ஆண்ட்ரியா நடிக்கும் ‘மனுஷி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதனை அடுத்து சூர்யா – கார்த்திக் சுப்புராஜின் படத்திலும், குருநாதர் வெற்றிமாறனின் ‘விடுதலை 2’விலும் நடித்து முடித்துவிட்டு, டைரக்‌ஷனில் கவனம் செலுத்தவிருக்கிறார். என்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *