அதனை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து வருகிறார். அதோடு தங்களது குழந்தையோடு புதிய வீட்டில் குடியேறுவதற்காக மும்பையில் நடிகர் ஷாருக்கான் வீட்டின் அருகில் புதிய வீட்டை தீபிகாவும், அவரது கணவரும்வாங்கி இருக்கின்றனர். தற்போது தீபிகா படுகோனுக்கு எப்போது பிரசவம் நடக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. தென்மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள தீபிகா படுகோன் முடிவு செய்துள்ளார். அந்த மருத்துவமனையில் தான் அடிக்கடி சோதனையும் செய்து வருகிறார். அவருக்கு இம்மாதம் 28-ம் தேதி பிரசவத்திற்கு டாக்டர்கள் நாள் குறித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது முழு ஓய்வில் இருக்கும் தீபிகா படுகோன் பிரசவத்திற்கு பிறகு மார்ச் வரை குழந்தையை கவனித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மார்ச் மாதத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன் நடிக்கும் கல்கி படத்தில் நடிக்க தீபிகா படுகோன் திட்டமிட்டு இருக்கிறார்.
தீபிகா படுகோன் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு இருந்த சோசியல் மீடியா பதிவில், “நானும், ரன்வீரும் குழந்தையை அதிகம் விரும்புகிறோம். குழந்தையுடன் குடும்பத்தை தொடங்கும் நாளை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.