✅ சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்.. கோலாகல தொடக்கம்.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்

✍️ |
aarudhra darisanam 2025 12 05ab651620eb4c75871ab11ef9891a4e 3x2 Thedalweb சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்.. கோலாகல தொடக்கம்.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 25, 2025 2:43 PM ISTChidambaram | 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.ஆருத்ரா தரிசனம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்

2
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

3
இதையொட்டி காலை பல்வேறு பூஜைகள் நடந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன

5
பின்னர் கொடியேற்றப்பட்டது

📌 Last Updated:Dec 25, 2025 2:43 PM ISTChidambaram | 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.ஆருத்ரா தரிசனம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா…


Last Updated:

Chidambaram | 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை பல்வேறு பூஜைகள் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் வீதிவிலா நிகழ்ச்சி நடைபெறும்.

ஜனவரி 2-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்றைய அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வரும். இரவு ஆயிரங்கால் மண்டபத்திற்கு சாமி எடுத்துச் செல்லப்படும்.

முக்கிய நிகழ்வாக வருகிற ஜனவரி 3-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம், திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். மதியம் 2 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி நடனமாடியபடி சித்தபைக்கு செல்வர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 3 2026 01 302411f865bc8c04ceb17d0f7d1eaade Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு, இன்று சாதகமான நாளாக இருக்கும் 2 உங்களைச்…

HYP 5721932 thaipusam2026viralimalaimurugantemple 7 Thedalweb தைப்பூசம் வந்தாச்சு - விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது...

💡 தைப்பூசம் வந்தாச்சு – விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது…

📌 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. Source link புதுக்கோட்டை…