💡 சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சப்தாவர்ண காட்சி… திரளான பக்தர்கள் தரிசனம்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5680050 cropped 03012026 134441 inshot 20260103 133918188 1 3x2 Thedalweb சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சப்தாவர்ண காட்சி... திரளான பக்தர்கள் தரிசனம்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 03, 2026 4:56 PM ISTசுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் மார்கழி திருவிழாவில் நடந்த சப்தாவர்ண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.+ சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சப்தாவர்ண காட்சி..

2
திரளான பக்தர்கள் தரிசனம்…குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது

3
சுவாமியை பல வண்ண மலர்களால் அலங்கரித்து மேளதாளங்கள் முழங்க திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காலை, மாலை வேளைகளில் அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.மூன்றாம் திருவிழா
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 03, 2026 4:56 PM ISTசுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் மார்கழி திருவிழாவில் நடந்த சப்தாவர்ண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.+ சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சப்தாவர்ண காட்சி… திரளான…


Last Updated:

சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் மார்கழி திருவிழாவில் நடந்த சப்தாவர்ண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

+

சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சப்தாவர்ண காட்சி… திரளான பக்தர்கள் தரிசனம்…

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. சுவாமியை பல வண்ண மலர்களால் அலங்கரித்து மேளதாளங்கள் முழங்க திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காலை, மாலை வேளைகளில் அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் திருவிழா அன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி, ஐந்தாம் திருவிழா அன்று காலை கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 11 மணிக்கு சுவாமிகள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு ரத வீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு திரும்பி கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்து தனது தாய் தந்தையர்களின் திருவிழாவில் பங்கெடுத்துக்கொள்ள வருகை தந்த கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய மூவரும் தங்களது தாய் தந்தையரை மூன்று முறை சுற்றி வலம் வந்தனர்.

அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். பின்பு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமியை தாலாட்டி கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பின்னர் இரண்டு முருகரும் ஒரு விநாயகரும் பிரிந்து செல்லும் சப்தா வர்ணக் காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தாணுமாலையன் சாமி எழுந்தருளிய கோவில் பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் முழுவதும், ஏழு விதமான வண்ண ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மா எனும் தாணுமாலையன் திருமேனியை மையமாக வைத்து, ஒவ்வொரு நிறமும் ஆன்மிக அர்த்தத்துடன் ஒளிப்படக் காட்சியாக வழங்கப்பட்டது.

ஒளி மற்றும் ஒலி அமைப்புகளுடன் நடைபெற்ற இந்த சப்தவர்ணக் காட்சி, பக்தர்களின் கண்களையும் மனதையும் கவர்ந்தது. சிவபக்தி பாடல்கள், வேத மந்திர ஒலிகளுடன் இணைந்து ஒளிக்காட்சிகள் வழங்கப்பட்டதால், கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிக சூழல் நிலவியது.

இந்த நிகழ்ச்சியை காண, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்துடன் வந்த பக்தர்கள், செல்போன்களில் காட்சிகளை பதிவு செய்து மகிழ்ந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவில் நிர்வாகம் சார்பில் ஒழுங்கான தரிசன வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 02 56d89073b9964cf84b50afe61a8feb5f Thedalweb Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வகையில், அறிவுக்கு அதிபதியான புதனும் (நாராயணன்), செல்வத்திற்கும் போகித்திற்கும் அதிபதியான…

Maha shivarathri 2026 02 9def1a107dc0d8d9e13a92fec78ba299 Thedalweb Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

📌 Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Rasi palan | இந்த ஆண்டு, மஹாசிவராத்திரி 300 ஆண்டுகளுக்குப்…