‘பிக் பாஸ்’ ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இதில், ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். ஒருவனைச் சுற்றி எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை என்கிற பாசிட்டிவான கருத்தைப் பரபரப்பாகவும், நகைச்சுவை ததும்பவும் சொல்லும் படம் இது. இந்தப் படத்தின் இரண்டாவது லுக், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக் கப்பலில் வெளியிடப்பட்டது. இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றன.
For the very first time in the history of Tamil cinema @rajuactor91‘s #BunButterJam 2nd Look poster launched on A Grand Cruise ship
More surprises Awaiting…#BunButterJamSecondLook
A @nivaskprasanna Musical
Written & Dir by @RMirdath
Prod by @RainofarrowsENT @sureshs1202 pic.twitter.com/4hYIPox9HH