✅ ஜனநாயகன் குறித்து அருண் குமார் ராஜன் | actor arun kumar rajan about jana nayagan release issue

✍️ |
ஜனநாயகன் குறித்து அருண் குமார் ராஜன் | actor arun kumar rajan about jana nayagan release issue
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது

2
உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை தெரியவில்லை.இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் சின்னத்திரை நடிகர் அருண் குமார் ராஜனிடம் பேசினோம்.திருவிழா மோட்ல இருந்தோம்!"'கடந்த ஒரு வாரமா தூக்கமே இல்லை

3
டிவியில இருபது வருஷக்கு மேல இருந்தாலும் பெரிய திரையில் என் முதல் படம் இது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பட வாய்ப்பு வந்தப்ப, 'முதல் படமே விஜய் சார் படமா'னு நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.படம் வெளியாகற தேதியை நான் மட்டுமில்ல, என் குடும்பமே ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தது.விஜய் சார் படம்னா சும்மாவே தெறிக்க விடும்

5
அரசியல் என்ட்ரி, கடைசிப்படம்னு

📌 ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை தெரியவில்லை.இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும்…


ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை தெரியவில்லை.

இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் சின்னத்திரை நடிகர் அருண் குமார் ராஜனிடம் பேசினோம்.

திருவிழா மோட்ல இருந்தோம்!

“‘கடந்த ஒரு வாரமா தூக்கமே இல்லை. டிவியில இருபது வருஷக்கு மேல இருந்தாலும் பெரிய திரையில் என் முதல் படம் இது. பட வாய்ப்பு வந்தப்ப, ‘முதல் படமே விஜய் சார் படமா’னு நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

படம் வெளியாகற தேதியை நான் மட்டுமில்ல, என் குடும்பமே ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தது.

விஜய் சார் படம்னா சும்மாவே தெறிக்க விடும். அரசியல் என்ட்ரி, கடைசிப்படம்னு அறிவிச்சதுன்னு எல்லாம் சேர்ந்துக்கிட திருவிழா மோட்ல இருந்தோம்.

ஆனா கடைசி நேரத்துல எல்லாம் மாறி படம் வெளிவர முடியாத ஒரு சூழல் உருவாகிடுச்சு.

லட்சக் கணக்கான விஜய் சார் ரசிகர்களைப் போலவே நானும் என் வீட்டாருமே கடுமையான மன உளைச்சல்ல இருக்கோம்.

டிவியில இருக்கிறவங்களுக்கு தங்களைப் பெரிய திரையில் பார்க்கிற அந்த நிமிடம் ரொம்பவே நெகிழ்ச்சியானது. அனுபவிக்கிறவங்க மட்டுமே அதை உணர முடியும். அப்படியொரு நாளுக்காக மன வலியோட காத்திட்டிருக்கேன்னுதான் சொல்லணும். படம் வெளிவராத சூழல் என்னை ரொம்பவே கஷ்டப் படுத்துது.

விவகாரம் கோர்ட்டில் இருக்கறதால டீடெய்லா நான் எதுவும் பேசக் கூடாது.

‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீ மேக்தான்னு வெளியில பேசறாங்கனு கேள்விப்பட்டேன். ஒரு வாதத்துக்கு அதுவே உண்மைனு எடுத்துகிட்டால் கூட அந்தப்படம் கதைக்காக தேசிய விருது வாங்கியது. தேசிய விருது வாங்கிய கதையில் திரும்பவும் சென்சார் கட்னா அது எப்படின்னு ஒண்ணுமே புரியலை’ என ரொம்பவே நொந்து போய் முடித்தார் அருண்.!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Mounam Pesiyadhe: "என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படமும்.!"- த்ரிஷா|My first release happened with Suriya, and now my next film is also with him!” – Trisha

💡 Mounam Pesiyadhe: “என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படமும்.!”- த்ரிஷா|My first release happened with Suriya, and now my next film is also with him!” – Trisha

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில்…

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

💡 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…