ரஜினியின் உழைப்பைப் பார்த்து ‘கூலி’ படக்குழுவினர் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு இருக்கிறது.
சமீபத்தில் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அதில் ரஜினிக்கு டூப் வைத்துக் கொள்ளலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால், ரஜினியோ ‘டூப் எல்லாம் வேண்டாம், என்னால் முடியாத காட்சிகளுக்கு வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் நானே பண்றேன்’ என தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சண்டைக் காட்சிகளில் 3 இடங்களில் மட்டுமே டூப் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற அனைத்து காட்சிகளிலும் ரஜினியே நடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த வயதில் இப்படி உழைக்கிறாரே என ரஜினியின் உழைப்பைப் பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். விசாகப்பட்டினம் படப்பிடிப்பினை முடித்துவிட்டு, சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.