நடிகர் தனுஷ் தனது 52-வது படத்தைத் தானே இயக்கி நடிக்கிறார். இதை டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ், ‘பா.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்கும் படம் இது.
படம் பற்றி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறும்போது, “ தனுஷின் திருச்சிற்றம்பலம், யாரடி நீ மோகினி போன்ற படங்களைப் போல குடும்ப சென்டிமென்ட், ஆக் ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளைக் கொண்ட படம் இது. ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.