🚀 “தம்பி சிவகார்த்திகேயனுக்கே குறுந்தகவல் அனுப்பினேன!” – இயக்குநர் இரா. சரவணன் |”I sent a short message to my brother Sivakarthikeyan!” – Director I. Saravanan

✍️ |
"தம்பி சிவகார்த்திகேயனுக்கே குறுந்தகவல் அனுப்பினேன!" - இயக்குநர் இரா. சரவணன் |"I sent a short message to my brother Sivakarthikeyan!" - Director I. Saravanan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'பராசக்தி' ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள்

2
அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு

3
கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர்

5
“செமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் சார்” அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார்

📌 ‘பராசக்தி’ ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள். அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு. கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது. ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர். “செமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம்…


‘பராசக்தி’ ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள். அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு. கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது. ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர்.

“செமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் சார்” அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார். ஆனால், ‘பராசக்தி’ ரிலீஸ் நேரமாயிற்றே, வேறு ஆட்களை அணுகலாம் எனப் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு போன் பண்ணியும் பலனில்லை.

தம்பி சிவாவிற்கே குறுந்தகவல் அனுப்பினேன். மின்னலென தம்பி நவனீதன் தொடர்புக்கு வந்தார். “நாளைக்கு படம் ரிலீஸ்ணே… இப்போ சொல்றீங்களே” என்றவர் அந்த மாணவியின் எண் வாங்கி, பேசி, டி.டி எடுத்து கல்லூரிக்கு அனுப்பி இரவு 11:30 மணிக்கு எனக்கு போன் பண்ணினார்.

உதவி கேட்ட நானே தூங்கிவிட்டேன். அந்த நேரத்தில் நவனீதன் அழைத்து ஃபீஸ் கட்டிவிட்ட விவரத்தைச் சொன்னார். “நன்றி அண்ணா…” என ஃபீஸ் கட்டப்பட்ட விவரத்துடன் அந்த மாணவி அனுப்பிய குறுந்தகவலும் வந்திருந்தது.

மிக நெருக்கடியான நேரத்தில் சட்டென உதவிய சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினேன். “அண்ணே…” என என் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டார் சிவா. அவர் கைகளின் வழியே அந்தக் குடும்பத்தின் ஆத்மார்த்த நன்றியைக் கடத்தினேன்.

நெகிழ்ந்திருந்த சிவாவிடம், ‘சங்காரம்’ நாவல் கொடுக்க விரும்பாமல், நிறைவோடு கிளம்பினேன். சிவா செய்தது கோடி ரூபாய் உதவி அல்ல.

ஆனால், அடுத்த நாள் பட ரிலீஸை வைத்துக்கொண்டு ஒருவரின் கவலை குறித்துக் கேட்கிற மனம் நிச்சயமாகக் கோடிக்குச் சமம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

⚡ காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

✅ dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

🔥 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…