⚡ நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்… தைப்பூச திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வு… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5738315 cropped 01022026 104838 inshot 20260201 104747516 1 Thedalweb நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்... தைப்பூச திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வு... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தொடர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநெல்வேலி என்ற ஊருக்கு பெயர் உருவாக காரணமான திருவிளையாடல், நான்காம் நாள் பக்தி பூர்வமாக அரங்கேற்றப்பட்டது.முன்னொரு காலத்தில் வேத பட்டர் என்ற அர்ச்சகர், நெல்லையப்பர் பெருமானுக்கு நித்திய அபிஷேக பூஜைகள் செய்து வந்தார்

2
சுவாமிக்கு அமுது படைக்க, வீடு வீடாக சென்று நெல் சேகரித்து, அதனை பயன்படுத்தி அமுது தயாரித்து பூஜை செய்வது அவரது வழக்கமாக இருந்தது.ஒரு நாள் வழக்கம்போல் ஊர்மக்களிடம் நெல் பெற்று வந்த வேத பட்டர், அதை சுவாமி நெல்லையப்பரின் மூல லிங்கத்தின் முன்பு உலர வைக்க வைத்து, தாமிரபரணி நதிக்கு புனித நீராட சென்றார்

3
அந்த நேரத்தில் திடீரென பெருமழை பெய்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நெல் நனைய கூடாதே என்ற எண்ணத்தில்

📌 தொடர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநெல்வேலி என்ற ஊருக்கு பெயர் உருவாக காரணமான திருவிளையாடல், நான்காம் நாள் பக்தி பூர்வமாக அரங்கேற்றப்பட்டது.முன்னொரு காலத்தில் வேத பட்டர் என்ற அர்ச்சகர், நெல்லையப்பர் பெருமானுக்கு நித்திய அபிஷேக…


தொடர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநெல்வேலி என்ற ஊருக்கு பெயர் உருவாக காரணமான திருவிளையாடல், நான்காம் நாள் பக்தி பூர்வமாக அரங்கேற்றப்பட்டது.

முன்னொரு காலத்தில் வேத பட்டர் என்ற அர்ச்சகர், நெல்லையப்பர் பெருமானுக்கு நித்திய அபிஷேக பூஜைகள் செய்து வந்தார். சுவாமிக்கு அமுது படைக்க, வீடு வீடாக சென்று நெல் சேகரித்து, அதனை பயன்படுத்தி அமுது தயாரித்து பூஜை செய்வது அவரது வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் வழக்கம்போல் ஊர்மக்களிடம் நெல் பெற்று வந்த வேத பட்டர், அதை சுவாமி நெல்லையப்பரின் மூல லிங்கத்தின் முன்பு உலர வைக்க வைத்து, தாமிரபரணி நதிக்கு புனித நீராட சென்றார். அந்த நேரத்தில் திடீரென பெருமழை பெய்தது. நெல் நனைய கூடாதே என்ற எண்ணத்தில் வேத பட்டர் செய்வது அறியாமல் புலம்பினார்.

இனி யாரிடம் சென்று நெல் வாங்குவது என மனம் வருந்தியபடி கோவிலுக்கு வந்து பார்த்தபோது, ஒரு அதிசயம் அவரை காத்திருந்தது. ஊரெங்கும் மழை பெய்திருந்த நிலையில், நெல்லையப்பர் சன்னிதியில் நெல் உலர வைக்கப்பட்ட இடத்தில் மட்டும் மழை பெய்யாமல், வேலி இட்டது போல நெல் பாதுகாக்கப்பட்டிருந்தது.

இந்த அதிசய காட்சியை கண்டு வார்த்தையிழந்த வேத பட்டர், உடனே பாண்டிய மன்னரிடம் சென்று நிகழ்ந்ததை தெரிவித்தார். மன்னரும் நேரில் வந்து இந்த தெய்வீக அதிசயத்தை கண்டு வியந்து போற்றினார். இந்த நிகழ்வே காலப்போக்கில் ‘நெல்லுக்கு வேலி இட்ட திருவிளையாடல்’ என புகழ்பெற்று, ஊருக்கே ‘திருநெல்வேலி’ என்ற பெயர் வர காரணமாக அமைந்தது.

இத்தகைய பிரசித்தி பெற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி, தைப்பூச திருவிழாவின் நான்காம் நாளில் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது. இதற்காக வேத பட்டர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். கோவில் சிவாச்சாரியார்கள் சப்பரத்தின் முன்பாக சென்று, ஊர் மக்களிடமிருந்து நெல் பெற்றுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பெற்ற நெல்லை சுவாமி நெல்லையப்பர் முன்பு உலர வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, வேத பட்டர் மேளதாளம் முழங்க கோவில் பொற்றாமரை குளத்துக்கு புனித நீராட சென்றார். அந்த சமயத்தில் மழை பெய்த நிகழ்வை சித்தரிக்கும் வகையில், கோவில் ஊழியர்கள் கோவில் முழுவதும் தண்ணீர் தெளித்தனர். பின்னர் புனித நீராடி திரும்பிய வேத பட்டர், நெல் உலர வைக்கப்பட்ட இடத்தில் மட்டும் மழை பெய்யாமல் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்து, பாண்டிய மன்னரை அழைத்து வந்து காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த திருவிளையாடல் நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் கோவில் ஓதுவார்கள் பாடலாகப் பாடி விளக்கியதுடன், இறுதியில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், பாண்டிய மன்னர் மற்றும் வேத பட்டர் ஆகியோருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தத்ரூபமாக நடைபெற்ற இந்த திருவிளையாடல் திருவிழாவை காண, திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 2026 02 aa0850d4ee1670783dad1b7b5204c6d6 Thedalweb Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கும்பம்இன்று ஒரு சிறப்பு நாள் 2 உங்கள் படைப்பாற்றல் உச்சத்தில்…

RAsi palan 2026 02 a5324d09ea59f44d409a5e6f9614e2f9 Thedalweb Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்:இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இது ஒரு உணர்ச்சிபூர்வமான நேரம் 2…