பாலிவுட் நடிகர் கோவிந்தா ஆரம்பத்தில் அரசியலில் நுழைந்து எம்.பியானார். அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் கோவிந்தா தன்னை இணைத்துக்கொண்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் மட்டுமே செய்தார்.
கோவிந்தா தனது மனைவி சுனிதா அஹுஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுனிதா தனது 15 வயதில் கோவிந்தாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் குழந்தை பிறந்த பிறகுதான் தனது திருமணத்தை கோவிந்தா வெளியுலகிற்கு தெரிவித்தார். கோவிந்தாவின் மனைவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
டைம் அவுட் வித் அங்கிட் என்ற அந்த நிகழ்ச்சியில் அங்கிட் சோப்ரா முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி எடுத்து வருகிறார். அவர் நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதாவிடம் பேசுகையில், காஃபி வித் கரண் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பீர்களா என்று கேட்டதற்கு, அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.