பூவெல்லாம் சமைத்துப்பார்!- தாமரைப்பூ அப்பளம் | flower recipes


540963 Thedalweb பூவெல்லாம் சமைத்துப்பார்!- தாமரைப்பூ அப்பளம் | flower recipes

தொகுப்பு, படங்கள்: இரா.கார்த்திகேயன்

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

என்னென்ன தேவை?

சிவப்பு, வெள்ளை தாமரைப்பூ – 2

உளுந்த மாவு – 100 கிராம்

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

வெள்ளை மிளகுத் தூள் – 1 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் சமைப்பது?

தாமரைப்பூவின் இதழ்களைத் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உளுந்த மாவில் பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாமரைப்பூவின் ஒவ்வோர் இதழையும், மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுங்கள். தயிர்ச்சோற்றுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டலாம்.

Source link