📌 பேச்சி: ‘மனுசனோட எல்லாஅழுக்கைப் பேசுறது தான் இந்தக் கதை’! – பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி | Pechi short film director Abilash Selvamani interview

✍️ |
பேச்சி: 'மனுசனோட எல்லாஅழுக்கைப் பேசுறது தான் இந்தக் கதை'! - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி | Pechi short film director Abilash Selvamani interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம்

2
ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம்

3
எங்களைவிட `மாரி' கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதைப் பொருட்படுத்தாம அவர் பண்ணிக்கொடுத்தாரு

5
அவர் என்னைய நம்பிப் பண்ணாரு

📌 நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம். ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம். எங்களைவிட `மாரி’ கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அதைப்…


நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம். ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம். எங்களைவிட `மாரி’ கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அதைப் பொருட்படுத்தாம அவர் பண்ணிக்கொடுத்தாரு. அவர் என்னைய நம்பிப் பண்ணாரு. அவருக்கும் நடிக்கிறதுல ஆர்வம் இருந்ததுனால வேலை வாங்கிட முடியும்ன்னு நம்பிப் பண்ணோம்.” என தன் மாரி-யின் மீதான நம்பிக்கையைச் சொல்லி அபிலாஷ் நெகிழ, அவரின் கைகளைப் பற்றியபடியே ராஜமுத்து பேசத் தொடங்கினார்.

ராஜமுத்து

ராஜமுத்து

” நான் சின்ன வயசுலயே போலியோவால பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போ ஜிம்னாஸ்டிக் பண்ற ஒரு நடனக்கலைஞர். இயக்குநர் எங்களைத்தேடி வந்து எனக்காக வெயிட் பண்ணி நீங்க நடிங்க பாத்துக்கலாம்ன்னு சொல்லி தான் நடிக்க வச்சாரு. வலியை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு அவங்க என்ன கேட்டாலும் செஞ்சுகொடுத்துறணும் என்கிற உறுதியோடதான் செஞ்சேன். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தாங்க. நம்மள நம்பி இப்படியான வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அதைச் சரியா பயன்படுத்தினேன் நல்லா வந்திருக்கு” என்கிற ராஜமுத்துவின் கண்களில் அத்தனை நிறைவு.

படப்பிடிப்பின் போது

படப்பிடிப்பின் போது

ராஜமுத்து சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அபிலாஷிடம் நத்தையைக் குறியீடாகப் பயன்படுத்திய நோக்கம் குறித்துக் கேட்டோம்.

” நத்தையை ரெண்டு விதமா பார்க்கலாம். நத்தை சருமம் ரொம்ப மென்மையா இருக்கும். அது பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழக்கூடியது. அப்படி நீர்நிலையில வாழக்கூடிய உயிர், பாலைவனத்துல விழுந்தா என்னவாகும் என்பதை `மாரி’ கதாபாத்திரத்தோட நிலையைக் காட்டுறதுக்காக வச்சுருந்தோம். அதுமட்டுமில்லாம சுடும் பாலைநிலத்தைத் தாண்டி நிச்சயம் நீரோடை வரும்ன்னு சொல்றதுக்காகவும் அதை வச்சுருந்தோம். அடக்குமுறை பண்ணிக்கிட்டு இருக்கிற மனிதர்கள், அவங்க செய்றது தப்புன்னு உணர்றது தான் இந்தப் படத்துக்கான வெற்றி. இந்தக் குறும்படத்தை வச்சு படவாய்ப்புகள் கிடைக்கும்ன்னு நம்புறேன். இதில் பேசப்படுற விஷயங்களை எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சுதான் எடுத்தேன் ஆனா நம்ம செய்றதைச் சரியா செஞ்சா சரியான இடத்தைப் போய் சேரும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. என்னோட வேலைசெஞ்சவங்களோட ஒத்துழைப்பினால் தான் இப்படியான உழைப்பைக் கொடுக்க முடிஞ்சிருக்கு” என மனம் நிறைகிறார் இயக்குநர் அபிலாஷ்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

💡 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

⚡ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

🔥 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…