📌 மார்கழி மாத பௌர்ணமி.. விடிய விடிய திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்..! | ஆன்மிகம்

✍️ |
Tiruvannamalai girivalam 2026 01 0db491ce763daf9d3592e96728502a53 3x2 Thedalweb மார்கழி மாத பௌர்ணமி.. விடிய விடிய திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்..! | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 03, 2026 7:24 AM ISTமார்கழி பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்; தஞ்சை பெரிய கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் கிரிவலம் நடந்தது.கிரிவலம் வந்த பக்தர்கள்மார்கழி மாத…


Last Updated:

மார்கழி பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்; தஞ்சை பெரிய கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் கிரிவலம் நடந்தது.

கிரிவலம் வந்த பக்தர்கள்
கிரிவலம் வந்த பக்தர்கள்

மார்கழி மாத பௌர்ணமியை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை சுற்றி நிலவொளியில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி மார்கழி மாத பௌர்ணமி நேற்று மாலை 06:45 மணிக்கு தொடங்கி நாளை சனிக்கிழமை மாலை 04:43 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று காலை முதலே திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிய ஆரம்பித்தனர்.

தொடர்ந்து மாலைக்கு மேல் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அக்னிலிங்கம், எமலிங்கம், வாயுலிங்கம்,நிருதிலிங்கம், வருணலிங்கம், குபேர லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும் திருநேர் அண்ணாமலையார், ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு பௌர்ணமி நிலவு ஒளியில் நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபடி இரவு முழுக்க விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.

அதே போல், தஞ்சை பெரிய கோயிலில் தென் கைலாய வலம் நிகழ்ச்சியில் 5,000க்கும் மேற்பட்டோர் கோயிலை சுற்றி மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிரிவலம் சென்றனர். மேலும், திருவாரூர் தியாகராஜர் கோயில் நான்கு ரத வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாராயணம் பாடியவாறு கிரிவலம் மேற்கொண்டனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 3 2026 01 302411f865bc8c04ceb17d0f7d1eaade Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு, இன்று சாதகமான நாளாக இருக்கும் 2 உங்களைச்…

HYP 5721932 thaipusam2026viralimalaimurugantemple 7 Thedalweb தைப்பூசம் வந்தாச்சு - விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது...

📌 தைப்பூசம் வந்தாச்சு – விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது…

📌 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. Source link புதுக்கோட்டை…