ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள படம், ‘தில் ராஜா’. விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஷெரின், சம்யுக்தா, கனிகா மன், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, ஞானசம்பந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். கோல்டன் ஈகிள் ஸ்டூடியோஸ் சார்பில் கோவை பாலசுப்ரமணியம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:
இதில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நாயகிகள் பட விழாவுக்கு அழைத்தோம். சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னிடம், உங்கள் பட ஹீரோக்கள் யாரையாவது கூப்பிடுங்கள் என்றார்கள். நானும் ஒரு ஹீரோவை அழைத்தேன். வரவில்லை. இதுதான் சினிமா. இந்தப் படத்தின் ஹீரோ விஜய் சத்யா, ஒரு கதை சொன்னார். கேட்டுவிட்டு என் கருத்தைச் சொன்னேன்.
‘நீங்க தான் டைரக்ட் பண்ணணும்’ என்றார். ‘என் ஸ்டைலில் கதை இல்லையே?’ எனத் தயங்கினேன். நீங்கள் தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள் என்றார். மகிழ்ச்சியுடன் ஒகே சொன்னேன். எந்தப் பிரச்சினை வந்தாலும், அதை எதிர்கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். அவர் திறமைக்குப் பெரிய பெயர் கிடைக்கும். இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.