⚡ ஸ்தம்பித்த ராமேஸ்வரம்… ராமநாதசுவாமியை காண பக்தர்கள் மணிநேரம் காத்திருப்பு… | ஆன்மிகம்

✍️ |
Rameswaram Devotee Rush 2025 12 5b1769fce1d70099cda360eefe03dcdf 3x2 Thedalweb ஸ்தம்பித்த ராமேஸ்வரம்… ராமநாதசுவாமியை காண பக்தர்கள் மணிநேரம் காத்திருப்பு... | ஆன்மிகம்
📌 Last Updated:December 28, 2025 1:06 PM ISTதொடர் விடுமுறையை முன்னிட்டு கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்ததால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.+…


Last Updated:

தொடர் விடுமுறையை முன்னிட்டு கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்ததால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

தொடர்

தொடர் விடுமுறை – பக்தர்கள் வெள்ளத்தில் ராமேஸ்வரம்..

அரையாண்டு தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், ராமநாதசுவாமி தரிசனத்திற்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில், காசிக்கு நிகரான புனிதத் தலமாகவும், பன்னிரண்டு ஜோதிலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்குவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அரையாண்டு விடுமுறை மற்றும் ஐயப்ப சுவாமி சீசன் தொடங்கியதையடுத்து, கடந்த சில நாட்களாகவே பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில், இன்று (டிசம்பர் 28) வார விடுமுறையை முன்னிட்டு வடமாநில பக்தர்கள், ஐயப்ப சுவாமி பக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர். பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், ராமநாதசுவாமி கோவிலின் உள்ளேயுள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மன் தரிசனம் செய்தனர்.

இதனிடையே, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் பாம்பன் சாலை பாலம் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 02 56d89073b9964cf84b50afe61a8feb5f Thedalweb Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வகையில், அறிவுக்கு அதிபதியான புதனும் (நாராயணன்), செல்வத்திற்கும் போகித்திற்கும் அதிபதியான…

Maha shivarathri 2026 02 9def1a107dc0d8d9e13a92fec78ba299 Thedalweb Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🚀 Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Rasi palan | இந்த ஆண்டு, மஹாசிவராத்திரி 300 ஆண்டுகளுக்குப்…