இந்திய அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்து சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றது எப்படி? | How did Sushmita Sen defeat actress Aishwarya Rai to win the Miss India title?

இந்திய அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்து சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றது எப்படி? | How did Sushmita Sen defeat actress Aishwarya Rai to win the Miss India title?


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகை சுஷ்மிதா சென்னும் 1994ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில் நடிகை சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றார்.

அந்நேரத்தில் மாடலிங்கில் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது இடம் வந்தார். அதனைத் தொடர்ந்து சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேல்டு அழகிப்போட்டிக்கு அனுப்பப்பட்டார். மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றது குறித்து அவருடன் இப்போட்டியில் பங்கேற்ற மாடல் ரூபி பாட்டியா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து ரூபி பாட்டியா கூறுகையில், “‘ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோர் கலந்துகொண்ட அழகிப்போட்டியில் சுஷ்மிதா சென் தேர்வு செய்யப்பட்டது குறித்து அப்போட்டியில் நடுவராக இருந்த ஃபெமினா பத்திரிகை ஆசிரியர் விம்லா பாட்டீலிடம் சமீபத்தில் பேசினேன்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

அதற்கு அவர் ஐஸ்வர்யா ராய் அழகிப்போட்டியின் போது நடந்த நடைப்பயிற்சியில் ஒரு முறை லேசாக கால் வளைந்து நடந்தார். அது ஐஸ்வர்யா ராய் அழகிப்போட்டியில் பட்டம் வெல்ல முடியாமல் போக காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராய் அழகிப்போட்டியில் வெல்ல முடியாமல் போனதற்கு அதுதான் காரணமா என்று நான் அவரிடம் கேட்டதற்கு, ‘அப்படி இல்லை. கால் ஸ்லிப் ஆவது யாருக்கும் நடக்கூடிய ஒன்று’ என்று என்னிடம் தெரிவித்தார். மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படக்கூடியவர்கள் குறிப்பிட்ட தகுதிகளைப் பார்க்கின்றனர் என்று விம்லா பாட்டீல் தெரிவித்தார்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு அழகான, புத்திசாலியான மற்றும் ஸ்மார்ட்டான பெண்ணைத் தேடுவார்கள் என்று அவர் கூறினார், மேலும் சுஷ்மிதா சென் அதற்குப் பொருத்தமாக இருந்தார். அதனால்தான் அவர் மிஸ் யுனிவர்ஸுக்குச் சென்றார்.

மிஸ் வேர்ல்டுக்கு மிகவும் கனவு காணக்கூடிய, அழகான, பெண்மை நிறைந்த பெண்ணைத் தேடினோம். அதனால்தான் ஐஸ்வர்யாவைத் தேர்ந்தெடுத்தோம் என்று தெரிவித்தார்” என்றார்.

ஒரே ஆண்டில் சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும், ஐஸ்வர்யா ராய் மிஸ் வேல்டு அழகிப்பட்டத்தை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *