கடந்த 2 ஆண்டுகளாக த.வெ.க-வில் இருக்கிறேன்; விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு | I have been in the TVK for the last 2 years; Vijay's father S.A. Chandrasekhar speaks

கடந்த 2 ஆண்டுகளாக த.வெ.க-வில் இருக்கிறேன்; விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு | I have been in the TVK for the last 2 years; Vijay’s father S.A. Chandrasekhar speaks


DeSIFMA (De Sales International Film & Media Academy) பட்டமளிப்பு விழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், “சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்த நல்ல விஷயத்தை படத்தில் சொல்லுங்கள். சினிமாவைப் போன்ற ஒரு பவர்ஃபுல் மீடியா வேறு கிடையவே கிடையாது.

நான் எந்தக் கட்சியும் கிடையாது. இப்போது நான் த.வெ.க, 2 வருடத்துக்கு முன்பு வரைக்கும் நான் எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனால், அண்ணா, பெரியார், கலைஞரைப் பிடிக்கும்.

1987-ல் கலைஞரை கைது பண்ணினப்போ எனக்கு கஷ்டமாக இருந்தது. மூன்றாவது நாள், `கலைஞரின் நீதிக்கு தண்டனை-னு” நான் விளம்பரம் கொடுத்தேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

அப்போ அவர் எதிர்க்கட்சித் தலைவர். எம்.ஜி.ஆர் என்ற பவர் ஆண்டு கொண்டிருந்தது.

கலைஞரின் நீதிக்கு தண்டனை-னு படம் எடுக்கிறேன், ரிலீஸ் ஆகுது, சி.எம் கூப்டாரு… எப்படியிருக்கும்.

ஒரு தப்பு நடக்குது, என்கிட்ட ஒரு ஆயுதம் இருக்கு அதை நான் யூஸ் பண்றேன். இப்போதெல்லாம் அப்படி படம் எடுக்க முடியாது.

ஒருமுறைதான் பிறக்கிறோம், ஒருமுறைதான் சாகப்போறோம். இதற்கிடையில், எதற்கு தினமும் பயந்து வாழனும். என் ரத்தம், ஜீன்தான் இப்போ…” என்று தன் மகன் விஜய்யைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *