டியூட், பைசன், டீசல் – தீபாவளி ரேஸில் முந்தியது யார்? | Who is the Winner among Diwali Release explained

✍️ |
டியூட், பைசன், டீசல் - தீபாவளி ரேஸில் முந்தியது யார்? | Who is the Winner among Diwali Release explained
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஒரு வழியாக பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாத தீபாவளி பண்டிகை முடிந்திருக்கிறது

2
சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களுமே அவற்றுகென முந்தைய வெற்றிகள், ட்ரெய்லர் பெற்ற வரவேற்பு, பாடல்கள் என சில எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்தன

3
எனினும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி இந்த தீபாவளி பந்தயத்தில் முன்னேறிய படம் எது என்பதை இங்கே பார்க்கலாம்

4
டியூட்: ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது மறுக்க முடியாத உண்மை

5
அது ‘டியூட்’ படத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது


ஒரு வழியாக பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாத தீபாவளி பண்டிகை முடிந்திருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களுமே அவற்றுகென முந்தைய வெற்றிகள், ட்ரெய்லர் பெற்ற வரவேற்பு, பாடல்கள் என சில எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்தன. எனினும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி இந்த தீபாவளி பந்தயத்தில் முன்னேறிய படம் எது என்பதை இங்கே பார்க்கலாம்.

டியூட்: ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது மறுக்க முடியாத உண்மை. அது ‘டியூட்’ படத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு அதை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியும், அதேநேரம் பெரியவர்களும் வெறுக்க முடியாத அளவுக்கு தந்திருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். அந்த அடிப்படையில் இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் அதிக வசூல் செய்து வருவது இந்த படம் தான்.

நான்கு நாட்களில் ரூ.83 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம், புக் மை ஷோ தளத்தில் சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது என்பதைத் தாண்டி தமிழ் சினிமாவுக்கு கீர்த்தீஸ்வரன் என்ற புதிய நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

பைசன்: மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் வெற்றி, இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ‘டியூட்’ படத்துக்கு இருந்த அளவுக்கான ஓபனிங் இந்த படத்துக்கு இல்லையென்றாலும், வாய்வழி பாசிட்டிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் திரைகளும், முன்பதிவுகளும் அதிகமாகின.

சாதிய ஒடுக்குமுறைகளை கடந்து ஒரு விளையாட்டு வீரன் எப்படி உலக அளவில் முன்னேறி சாதித்தான் என்ற கதையை ஒரு நல்ல சினிமாவாக கொடுத்து மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படம் துருவ் விக்ரமுக்கு மிகச் சிறந்த ஓபனிங்கை கொடுத்திருக்கிறது.

முதல் நாளில் புக் மை ஷோ தளத்தில் 59 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்ட நிலையில், மெல்ல படிப்படியாக அதிகரித்து நான்காவது நாள் ஒரு லட்சத்து 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. டியூட் அளவுக்கு வசூல் இல்லையென்றாலும் இந்த தீபாவளிக்கு வெளியானதில் ஒரு நேர்த்தியான, நேர்மையான படைப்பு என்று தாராளமாக இதனை சொல்லலாம்.

டீசல்: டீசல் மாஃபியா என்ற மிக முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களோடும் ஒப்பிடுகையில், இந்தப் படத்துக்கு ப்ரோமோஷன் மிகவும் குறைவாகவே செய்யப்பட்டது. அதேபோல மற்ற இரண்டு படங்களுக்கும் கிடைத்த திரையரங்குகளை விட இப்படத்துக்கு கிடைத்த திரையரங்குகள் மிக குறைவு. இதனால் இயல்பாகவே இப்படத்தின் வசூலும் குறைந்துவிட்டது. இது குறித்து படத்தின் இயக்குநரே கூட சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான மூன்று படங்களில் பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்துள்ள படம் ‘டியூட்’தான். அதேவேளையில், ஒரு நல்ல சினிமாவுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு ஒரு தரமான படைப்பாக கொண்டாடப்படும் படம் என்றால், அது ‘பைசன் காளமாடன்’ தான்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1380421' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம்…

அங்கம்மாள் விமர்சனம்: கீதா கைலாசம், சரண் சக்தி, கல்லூரி பரணி நடிப்பில் அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? | Angammal Review: How is Angammal movie starring Geetha Kailasam Saran Shakthi, and kalloori Bharani?

அங்கம்மாள் விமர்சனம்: கீதா கைலாசம், சரண் சக்தி, கல்லூரி பரணி நடிப்பில் அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? | Angammal Review: How is Angammal movie starring Geetha Kailasam Saran Shakthi, and kalloori Bharani?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாயின் நிழலில் தஞ்சம் கொண்ட…

``உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி" - ஏவிஎம் சரவணன் மறைவுக்கு கமல் இரங்கல் | ``A tribute from one of the children who calls you by your name'' - Kamal mourns the passing of AVM Saravanan

“உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி” – ஏவிஎம் சரவணன் மறைவுக்கு கமல் இரங்கல் | “A tribute from one of the children who calls you by your name” – Kamal mourns the passing of AVM Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை…