இந்தியக் குடியரசின் புதிய துணை குடியரசுத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் அரங்கில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அவரது தேர்வு, தமிழகத்தின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தச் செய்தி வெளியானதும், பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தமிழ் சினிமா உலகின் முக்கியப் புள்ளியும், நடிகரும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனருமான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அவரின் பதிவில், “மாண்புமிகு திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறப்பான நிர்வாகத் திறமை, எளிமை மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு கொண்ட ஒரு தலைவர், இந்த உயரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது தமிழ்நாட்டிற்குப் பெருமைக்குரிய தருணம். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.