ஓடிடி ரிலீஸ்:
தமிழில், அதர்வா நடித்திருக்கும் ̀தணல்’ திரைப்படம் இந்த வாரம் ̀அமேசான் ப்ரைம்’ தளத்தில் வெளியாகியிருக்கிறது.டோலிவுட்டில், பெல்லம் கொண்டா ஶ்ரீனிவாஸ், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `கிஷ்கிந்தாபுரி’.
இப்படம் இந்த வாரம் ̀ஜீ 5′ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனம் ஈர்க்கப்பட்டு, யூகே-வின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் என்ட்ரியாக அனுபப்பட்ட திரைப்படம் `சந்தோஷ்’.
இந்தாண்டின் தொடக்கத்திலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் பிரச்னைகளில் சிக்கி இத்திரைப்படம் தாமதமானது.
இந்த வாரம் இத்திரைப்படம் ̀லயன்ஸ்கேட் ப்ளே’ ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில் சில சிக்கல்களால் இப்படத்தின் ரிலீஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதை தாண்டி, மலையாள நடிகர் ஆசிஃப் அலியின் `அபயந்திர குட்டவாளி’ , ̀ஜீ5′ தளத்திலும், ̀மிரேஜ்’ திரைப்படம் ̀சோனி லைவ்’ ஓடிடி தளத்திலும் வெளியாகியிருக்கிறது. `பகவத் சாப்டர் ஒன்: ராக்ஷஸ்’ என்ற இந்தி திரைப்படமும் `ஜீ5′ ஓடிடியிலும் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது.
மேலும், டைகர் ஷெரஃபின் ̀பாகி 4′ திரைப்படம் ̀அமேசான் ப்ரைம்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.