'மக்கள் தான் என் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்'- பிறந்தநாளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வடிவேலு

நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம்: “நடிகர் சங்கம் நடிகர்களைப் பாதுகாப்பதற்குதான்” – வடிவேலு | Vadivelu says that nadigar sangam is functioning to protect actors in nadigar sangam genral body meeting


இந்த நிகழ்வில் வடிவேல், “சில நடிகர்கள் தங்களின் படம் நன்றாக ஓட வேண்டும் என அவர்களின் போட்டி நடிகர்களின் படத்திற்கு யூட்யூபர்கள் மூலம் எதிர்மறையான விமர்சனங்களைத் தர வைத்து தோல்வியடையச் செய்கிறார்கள்.

நம்முடைய திரைக்கலைஞர்களைப் பற்றி தவறாகப் பேசி சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி விடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலரே இந்தப் படத்தைப் பற்றி, அதைப் பற்றி பேசு எனப் பேச வைக்கிறார்கள்.

இந்த விஷயத்திற்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் சிலரும் உடந்தையாக இருக்கிறார்கள்.

இந்தச் செயலை நடிகர் சங்கத்தினர் யாரும் கண்டிப்பதில்லை. நடிகர் சங்கம் நடிகர்களைப் பாதுகாப்பதற்குதான்.

10 பேர் சேர்ந்து சினிமாவையே அழிக்க முயல்கிறார்கள். நடிகர் சங்கம் இதனைத் தடுக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *