இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானத் திரைப்படம் “ரிதம்’.
இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இயக்குநர் வசந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முதன் முதலில் இணைந்து பணிபுரிந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்திருந்தன.

அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,
“கால் நூற்றாண்டு
கழிந்தபின்னும்
ரிதம் படப் பாடல்கள்
கொண்டாடப்படுவதைப்
புன்னகையோடு பார்க்கிறேன்
இசை மொழிக்கு
அழகு தருகிறது