“யாரும் சொந்தம் கொண்டாட முடியாது” – சர்ச்சைக்கு பார்த்திபன் பதிலடி | Director Come Actor Parthiban Explain About “Naan thaan CM” Movie

✍️ |
“யாரும் சொந்தம் கொண்டாட முடியாது” - சர்ச்சைக்கு பார்த்திபன் பதிலடி | Director Come Actor Parthiban Explain About "Naan thaan CM" Movie


‘நான் தான் சிஎம்’ என்ற படத்துக்கு எழுந்த சர்ச்சைக்கு, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக ‘நான் தான் சி.எம்’ என்ற படத்தை அறிவித்தார். அப்போது வெளியிட்ட பதிவில், இப்படத்தில் சிங்காரவேலன் என்ற அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும், சோத்துக் கட்சி என்பது கட்சியின் பெயர் எனவும், படகுதான் சின்னம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதுவே சர்ச்சையாக உருவானது.

பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், “பயமில்லை – ஆனால் பயனில்லை! ஆட்ஷேபம் தெரிவிப்பது யாவும் நாங்கள் ஆள் / ஆழ் நோக்கமின்றி வைக்கப்பட்ட கற்புள்ள கற்பனை பெயர்களே! CM பக்கத்தில் rhyming ஆக ‘சி’ இருக்க வேண்டுமென (மெனக்கெடாமல்) வைத்த பெயரே சிங்காரவேலன். ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன் / மதிக்கிறேன் கவனத்தில் இட்டதற்கு!

Boat-ம் அப்படியே தடாலடியாக அதை கவிழ்த்து வேறு சின்னம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படம் மீனவ சமுதாயப் படமல்ல. ‘சோத்துக் கட்சி’ என்பது கால் நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்த சோ தலைமையில் 1000 பேருக்கு 10 கிலோ அரிசி கொடுத்துத் துவங்கப்பட்டது. அந்த ‘சோ’த்துக் கட்சி பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை. இல்லாதவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அவசிய அரசியல். அதை என் எல்லா படங்களும் பேசும். இப்போது இப்படமும். அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

முற்றுகை போராட்டம் போன்ற அநாவசிய / வசிய விளம்பரங்கள் என் படத்திற்கு தேவையல்லை. மீனவ நண்பர்களை மட்டுமல்ல யார் மனதையும் இந்த CM சீர் கெட செய்ய மாட்டான் என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1376943' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

குறையாத சம்பளம்: அஜித்தின் அடுத்த பட தயாரிப்பில் சிக்கல் | ajith kumar s next film production delayed over salary issue

குறையாத சம்பளம்: அஜித்தின் அடுத்த பட தயாரிப்பில் சிக்கல் | ajith kumar s next film production delayed over salary issue

அஜித் தனது சம்பளத்தை குறைக்காத காரணத்தினால், படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தினைத் தொடர்ந்து…

"மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால்"- இயக்குநர் சேரன்|cheran on director v. sekhar

“மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால்”- இயக்குநர் சேரன்|cheran on director v. sekhar

“வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்…

"கனத்த இதயத்துடன் விலகுகிறேன்" - ரஜினி, கமல் கூட்டணியிருந்து விலகிய சுந்தர் சி! | "I am leaving with a heavy heart" - Sundar C quits Rajinikanth, Kamal alliance thalaivar 173 ! |

ரஜினி, கமல் கூட்டணியிருந்து விலகிய சுந்தர் சி! | “I am leaving with a heavy heart” – Sundar C quits Rajinikanth, Kamal alliance thalaivar 173 ! |

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே…