தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி ஆகியோர் நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தவிர திரைப்பிரபலங்கள் பலரும் ரோபோ சங்கரின் உடலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை வரலட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் ஞாயிற்றுக்கிழமை தான் அவருடன் பேசினேன். ஆனால் இப்போது அவர் இல்லை. என்னால் இதனை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். அவர் பலருக்கும் சிரிப்பை தந்தவர். இறைவன் அவருக்கு சாந்தியை அருளட்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கும் பதிவில், ” நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு.
என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்” என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.