“கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான்” – மிர்ச்சி விஜய் | “He is the one who changes costumes more than Kavin” – Mirchi Vijay

✍️ |
``கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான்" - மிர்ச்சி விஜய் | ``He is the one who changes costumes more than Kavin'' - Mirchi Vijay


நானும் கவினும் சேர்ந்து ஈவென்ட் செய்வதிலிருந்தே நண்பர்கள். ‘ரூ.7,000 தராங்களாம்… வேணாம் ரூ10,000 கேட்டுப்பாரு’ எனப் பேசத் தொடங்கி, நான் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, அங்கு கவினின் படப் போஸ்டரைப் பார்த்து அவருக்கு செல்போனில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது வரை எங்களின் நட்பு தொடர்கிறது.

இருவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறோம். இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

Kiss movie press meet - Mirchi Vijay

Kiss movie press meet – Mirchi Vijay

முதலில் கவினுக்கு நன்றியும், இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகளும். இயக்குநர் சதீஷுக்கும் நன்றி. இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் எடிட்டர்.

அவரை முதன்முதலில் பார்த்தபோது, பாம்பேயிலிருந்து காஸ்ட்யூம் டிசைனர் யாரையோ அழைத்து வந்திருக்கிறார்கள் போல என்றுதான் நினைத்தேன்.

கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான். அவரைப் பார்த்ததும் கலர் கலர் சட்டை, சென்ட் வாசம் தூக்குது, பயங்கர ஸ்மார்ட்டா இருக்காரு யாரு இவர்னு இயக்குநரிடம் கேட்டேன்.

இவர்தான் இந்தப் படத்தின் எடிட்டர்னு சொன்னாங்க. கண்டிப்பா இவரும் நடிகராக வருவார்னு நம்புறேன். இந்தப் படத்துல என்னுடைய அப்பா விடிவி கணேஷ் சார்.

இன்னும் அவர்கூட 4 நாள் நடிச்சிருந்தாலும் சந்தோஷமா இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஜென் மாஸ்டரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம்.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால் | Actors should be paid less: Vishnu Vishal

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால் | Actors should be paid less: Vishnu Vishal

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்…

Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல்…

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…