சக்தித் திருமகன் விமர்சனம்: விஜய் ஆண்டனி, ‘காதல் ஓவியம்’ கண்ணன் நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் சக்தித் திருமகன் | Sakthi Thirumagan Review: directed by Arun Prabhu, Vijay Antony, ‘Kaathal Oviyam’ Kannan

✍️ |
சக்தித் திருமகன் விமர்சனம்: விஜய் ஆண்டனி, 'காதல் ஓவியம்' கண்ணன் நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் சக்தித் திருமகன் | Sakthi Thirumagan Review: directed by Arun Prabhu, Vijay Antony, 'Kaathal Oviyam' Kannan


எளிமையான பின்கதையின் எதார்த்தத்தையும், விறுவிறு நிகழ் கதையில் பரபரப்பையும் கச்சிதமாகக் கொண்டு வந்து, தொழில்நுட்பப் பிரிவைத் தலைமை தாங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர். காலிஸ்ட்.

நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பரபர திரைக்கதைக்கு ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, தின்ஸா கூட்டணியின் படத்தொகுப்பு முதற்பாதிக்குச் சுவை கூட்டியிருக்கிறது.

நீண்ட நெடிய கன்டென்ட்டை அதிவேகத்தில் ஓடவிட்டு சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். விஜய் ஆண்டனியின் இசையில், பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து, கதைக்கருவிற்கு வலுசேர்க்கின்றன.

பின்னணி இசையால் பிரமாண்டம், எமோஷன், ஆக்ஷன், காதல், ஹீரோயிஸம் என எல்லா பாத்திரங்களையும் நிரப்பியதோடு, பரபரப்பையும் கை பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சக்தித் திருமகன் விமர்சனம் | 
Shakthi Thirumagan Review

சக்தித் திருமகன் விமர்சனம் |
Shakthi Thirumagan Review

கதாநாயகனின் அரசியல் பராக்கிரமங்களை விவரிக்கும் காட்சித்தொகுப்போடு, பரபரவெனச் சூடு பிடித்துப் பறக்கிறது திரைக்கதை. அரசு கட்டமைப்பின் மடிப்புகள், படிநிலைகள், ஓட்டைகள், ஏற்றயிறக்கங்கள் என நுணுக்கமாகப் பேசியபடி சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது முதல் பாதி.

இவற்றுக்கிடையில், கதாநாயகனின் அரசியல் நகர்வுகள் மூலமாக அரசியல் நையாண்டி, அதனூடாக சமூக அவலம் போன்றவற்றை, காமெடியாகவும் சில ட்விஸ்ட்டாகவும் தூவுகிறது திரைக்கதை. 



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல்…

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…

``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi

“இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச்…