மேஷம்: நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
மிதுனம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்டநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் தேடி வருவார். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். முன்கோபம் வேண்டாம். ஷேர்மூலம் பணம் வரும். அலுவலகத்தில் மதிப்புயரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.
சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். கையில் பணம் புரளும். அலுவலகரீதியான பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பான செலவுகள் இருக்கும். அலுவலக பணிகளை வீட்டிலும் செய்ய நேரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். பணியாட்களிடம் அன்பாக இருக்கவும்.
துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.
விருச்சிகம்: உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
தனுசு: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.
மகரம்: நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
கும்பம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடனை பைசல் செய்வீர். முன் கோபம் விலகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.
மீனம்: மனக்குழப்பம் தீரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |