நாம் தமிழர்: “உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது?” – kpy பாலவுக்கு ஆதரவாக சீமான் | NTK: “Why he only getting money that you all don’t get?” – Seeman in support of kpy Bala

✍️ |
நாம் தமிழர்: ``உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது?" - kpy பாலவுக்கு ஆதரவாக சீமான் | NTK: ``Why he only getting money that you all don't get?'' - Seeman in support of kpy Bala


பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்.

இப்பொழுது தம்பி பாலாவைப் பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற நடுக்கம் வருகின்றது.

யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்ற கேள்விக்குப் பதில் தருவார்களா?

அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினைத் தொடர்ந்து செய்துகொண்டே இரு.

தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணைநிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ‘அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!’ என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்றுகொண்டே இரு!

மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல்…

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…

``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi

“இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச்…