Ajithkumar: “துபாய் கார் விபத்தை நான் சந்தித்தப் பிறகு பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்” – அஜித் | ajith on dubai car accident

✍️ |
Ajithkumar: "துபாய் கார் விபத்தை நான் சந்தித்தப் பிறகு பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்" - அஜித் | ajith on dubai car accident


சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.

‛குட் பேட் அக்லி” படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது.

இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.

3-ம் இடம் பிடித்த அஜித் அணி

3-ம் இடம் பிடித்த அஜித் அணி

3ம் இடத்தை பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்குமார் ‘India Today’-விற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் ரேஸிங்கின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து பேசியிருக்கிறார். “போட்டியை முடிக்கும் வரை அல்லது ஒரு மோசமான விபத்தை சந்திக்கும் வரை நாம் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை உணரமுடியாது.

எப்படியாவது இலக்கை அடைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்