பைசன்: ``தூத்துக்குடி, திருநெல்வேலி கபடி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்" - மணத்தி கணேசன் கோரிக்கை | Bison Manathi Ganesan request to gave opportunities to Thoothukudi Tirunelveli Kabaddi players

பைசன்: “தூத்துக்குடி, திருநெல்வேலி கபடி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்” – மணத்தி கணேசன் கோரிக்கை | Bison Manathi Ganesan request to gave opportunities to Thoothukudi Tirunelveli Kabaddi players


மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ், பசுபதி, அனுபமா, அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது பைசன். இந்த நிலையில், படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் இப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

படம் பார்த்துவிட்டு ஊடகத்திடம் பேசிய மணத்தி கணேசன், “கபடியில் என்னுடைய உழைப்பை படத்துல இயக்குநர் அற்புதமாக பண்ணிருக்காரு. துருவ் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்காரு.

சினிமா ரொம்ப ஈஸினு நான் நெனச்சேன். நாங்க ஸ்போர்ட்ஸ்ல எப்டி கஷ்டப்பட்டோமோ அதேமாதிரி சினிமா துறைல ரொம்ப கஷ்டப்பட்டு படத்த எடுத்துருக்காங்க.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *