மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் ̀பைசன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை திரைப்படமாக கொண்டு வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
1994-ல், ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய – பாகிஸ்தான் இடையிலான போட்டி பிரச்னையாகி, இரு அணிகளும் சமன் புள்ளிகளை எடுத்திருந்த நிலையில் போட்டி கைவிடப்பட்ட சம்பவம் பலரும் அறிந்ததே!
இந்தச் சம்பவத்தையும் ̀பைசன்’ படத்தில் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம் முன்பு தூர்தர்ஷனுக்கு அளித்தப் பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.