பைசன்:
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘பைசன்’ திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வனத்தி கிராமத்திலிருக்கும் கிட்டானுக்கு கபடி மீது அளப்பரிய பிரியம். ஆனால், ஊரில் நடக்கும் யுத்தங்கள், தன்னுடைய அனுபவம் என கிட்டானின் கபடி ஆசைக்கு அவரின் தந்தை தடையாக இருக்கிறார்.

பிறகு, தனக்குப் போடப்பட்ட தடைகளை உடைத்து எப்படி கிட்டான் முன்னேறினார் என்பதுதான் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் கதை.