``சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் விஜய் சார்தான்!" - பிரகன் பேட்டி | ``Vijay sir is my inspiration in cinema!'' - Pragan

“சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் விஜய் சார்தான்!” – பிரகன் பேட்டி | “Vijay sir is my inspiration in cinema!” – Pragan


”எல்லா குடும்பத்திலேயுமே பிரச்னை இருக்கத்தான் செய்யுது. என்னோட வளர்ச்சியில் மட்டுமே இப்போ கவனம் செலுத்த விரும்புறேன். என் குடும்பத்தில் இருக்கிறவங்களே என்னைப் புரிஞ்சுக்காதப்போ, என் மனைவி சினேகாதான் என்னை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போறாங்க.

’வருத்தப்படாதே, நான் இருக்கேன். உடம்பை ஃபிட்டா வெச்சுக்கோ, விமர்சனங்களைக் காதில் வாங்கிக்காத’ன்னு ரொம்ப கேரிங்கா பார்த்துக்கிறாங்க. ரொம்ப அன்பான மனைவி. சினேகா கடவுள் கொடுத்த கிஃப்ட்ன்னுதான் சொல்லணும்.

இப்போ, லேப் டெக்னீஷியனா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஃப்ரீ டைமில் அவங்களும் என்கூட ரீல்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கு.

எனக்கு 8 லட்சம் ஃபாலோவர்ஸும், மனைவிக்கு 2 லட்சம் ஃபாலோவர்ஸும் இருக்காங்க. லவ் பண்ணும்போது காதலிச்சதைவிட இப்போ இன்னும் காதல் அதிகரிச்சிருக்கு.

எங்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வருது. அதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. இதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வேலை. ஆரம்பத்தில் ஏன் இப்படி விமர்சனம் பண்றாங்கன்னு கவலையா இருந்தது.

ஆனா, இப்போல்லாம் அதைப் பற்றி யோசிப்பதே கிடையாது. என் முழு கவனம் எல்லாம் மக்களை சந்தோஷப்படுத்த ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட், ஃபேமிலி ஃபீல் குட் வீடியோக்கள் பண்ணணும்.

சொந்தமா தொழில் தொடங்குவதோடு, சினிமாவில் சாதிக்கணும். அதுதான் என் கனவு, லட்சியம் எல்லாமே!” என்கிறார் உறுதியாக.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *