திருநெல்வேலியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவுரை சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பைசன் காளமாடன்’. இதில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த அக்டோபர் 17 திரையரங்குகளில் வெளியானது.
திருநெல்வேலியில் இந்த படம் ஓடும் ஒரு திரையரங்குங்கு துருவ் விக்ரம், அனுபாமா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜ் விசிட் அடித்தார். அப்போது படக்குழு பேசிக் கொண்டிருந்தபோது படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் ஆடிக் கொண்டும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாரி செல்வராஜ் மைக்கில் அவர்களுக்கு கண்டிப்பான முறையில் அறிவுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “நான் உனக்கு சாராயம் கொடுக்கவில்லை. நான் உனக்கு கொடுத்தது புத்தகம். என்னுடைய சினிமாவை நீ புத்தகமாக படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உனக்கு சாராயம் கொடுத்து ஆடவைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. தயவு செய்து சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். ஒவ்வொரு படம் வரும்போது இந்த மாரி செல்வராஜை உங்கள் சொந்த அண்ணனாக தம்பியாக நினைத்து பார்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உனக்கு நான் சாராயம் கொடுக்கல கையில புத்தகம் தான் கொடுக்கிறேன் என்னோட படத்தை புத்தகமா பாரு – @mari_selvaraj Speech
Great sir
— saba தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Dmk_saba_) October 20, 2025