Arasan:``முதல்முறையாக என் அன்புக்குரிய சிம்பு மற்றும் வெற்றிமாறனுடன்" - இசையமைப்பளர் அனிருத் | Arasan: ``For the first time with my beloved Simbu and Vetrimaaran'' - Music composer Anirudh

Arasan:“முதல்முறையாக என் அன்புக்குரிய சிம்பு மற்றும் வெற்றிமாறனுடன்” – இசையமைப்பளர் அனிருத் | Arasan: “For the first time with my beloved Simbu and Vetrimaaran” – Music composer Anirudh


சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்” திரைப்படம் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை’ படத்தின் கதையுடன் தொடர்புடையது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களிடமும், திரைப்பட ஆர்வலர்களிடமும் இந்தப் படம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்கம் மற்றும் யூட்யூப் என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு புரோமோ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு.

இசையமைப்பாளர் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத்

நேற்று இரவு, திரையரங்குகளில் `அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இன்று யூட்யூபில் வெளியாகும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இயக்குநர் நெல்சனும் இந்த புரோமோவில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் புரோமோவில் தனுஷ் ரெஃபரென்ஸ் வைத்திருப்பதை ஹைலைட் விஷயமாக ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *