Bison: “இசை ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே" – இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா

✍️ |
Bison: ``இசை ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே" - இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா


மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

மாரி செல்வராஜ் - ரஞ்சித் - துருவ்: பைசன் வெற்றிவிழா
மாரி செல்வராஜ் – ரஞ்சித் – துருவ்: பைசன் வெற்றிவிழா

இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, “இந்த திரைத்துறையில் நிறைய படத்துக்கு இசையமைச்சிருக்கேன்.

ஆனால் என்னைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமைந்தது இந்தப் படத்தில்தான். எனவே, என்னை நம்பிய ரஞ்சித் அண்ணாவுக்கும், மாரி செல்வராஜ் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி.

இந்த படத்துல நான் போட்ட எந்த மியூசிக்குமே மாரி சாருக்கு திருப்தியாக இல்லை. என்ன மியூசிக் போட்டாலும் அடுத்து… வேற…னு கேட்டுக்கிட்டே இருப்பார்.

ஆனால் இந்த படம் முடிஞ்சு இதுக்கான இன்டர்வியூ கொடுக்கும்போதுதான், மாரி சார் என்னைப் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிட்டு பேசினார்.

அப்பதான் என்னுடைய பெஸ்ட்காக அவர் எவ்வளவு தூரம் சிரமப்பட்டு இருக்கன்னு புரிஞ்சது. சில நேரங்களில் நமக்கே நாம யாருன்னு தெரியாது.

இந்தப் படத்துலதான் நான் யார்னு எனக்கு புரிய வைத்தது. மாரிசார் இதை என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன். திறமையான பட குழுவோடு சேர்ந்து பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி.

அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் போது அதனுடைய வெற்றி எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் வேலை செய்யும் போது உணர்ந்தேன்.

bison nivas Thedalweb Bison: ``இசை ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே" - இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா
பைசன் வெற்றிவிழா: நடிகர் பசுபதி – இசையமைப்பாளர் நிவாஸ்

பைசன் படத்திலிருந்து இசை என்பது ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.

இதற்கு பின்னால் நான் செய்யக்கூடிய ஒவ்வொரு இசையும் அதற்காகவே இருக்கும் என்ற பொறுப்புணர்வை உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய இசையை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்துக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை ரஜிஷா விஜயன், “நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதல்வதாக மீடியா. நம்முடைய பொறுப்பு ஒரு நல்ல படம் எடுப்பது மட்டுமே.

அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியா. பைசன் படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை தாண்டி, அந்த படத்தை பார்த்த எல்லோரும் படத்தை பற்றி பேசியதுதான் இந்த வெற்றிக்கு காரணம்.

இந்த படத்துக்கான முதல் நாள் ஷூட்டிங் சென்ற பொழுது இந்த படத்திற்கான சக்சஸ் மீட்டிங் பற்றிய ஒரு கனவு இருந்தது. அந்த கனவை இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக உழைத்த அத்தனை டெக்னீசியன்களுக்கும் நன்றி. குடும்பத்தோடு கூட நேரம் செலவிட முடியாத சூழல் இருந்திருக்கும்.

பைசன் வெற்றிவிழா: நடிகை ரஜிஷா விஜயன் - நடிகர் அமீர்
பைசன் வெற்றிவிழா: நடிகை ரஜிஷா விஜயன் – நடிகர் அமீர்

எனவே, டெக்னீசியன்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் மிக்க நன்றி. ஒரு நடிகர், வாழ்வில் நடிக்க வேண்டும் என விரும்பக்கூடிய கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருந்தார்கள்.

என்னால் முடிந்தவரை அதை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். என்னை நம்பிய இயக்குனர் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…