இப்போவே வீடியோ எடுக்கணும், அது இதுனு வித்தியாசமாகப் பண்ணிட்டு இருக்கான்’னு சொன்னாரு.
பிறகு துருவ் வெளிநாட்டுக்குப் போய்ப் படிச்சிட்டு வந்தாரு. அவரை அதற்குப் பிறகு சந்திக்கவே இல்ல. அவர் நடிச்ச இரண்டு படங்களை நான் பார்த்திருக்கேன்.
‘பைசன்’ படப்பிடிப்பில் துருவ், விக்ரமோட ஒரு மினியேச்சர் மாதிரிதான் இருந்தாரு. நிறைய கஷ்டப்பட்டு நடிக்கிற நடிகர்கள் இங்கு இருக்காங்க.
விக்ரமோட டெடிகேஷன் ஒரு படி மேல. விக்ரம் போடும் உழைப்பை யாரும் போட முடியாது.
விக்ரம் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு ஒரு பெரிய விபத்து நடந்தது. அவரால் முட்டிப் போட்டு உட்கார முடியாது. சேது படத்தில் அவர் தொடையில் தெரியுற தழும்பு உண்மையானது.
அவருக்கு நடந்த விபத்தில் ஏற்பட்ட காயம்தான் அது. அப்படி ஜெயிக்கணும்னு ஒரு வெறி அவருக்கு இருந்தது. தன்னை ஏளனமாகப் பார்த்தவர்கள் முன்னாடி ஜெயிக்கணும்னு ஒரு எண்ணம் அவருக்குள் இருந்தது.
‘சேது’ படத்தில் அவர் கதாநாயகனாக வருவதற்கு நான் ஒரு காரணமாக இருந்திருப்பேன். ‘சேது’ படம் முதலில் பூஜைப் போட்டு டிராப் ஆச்சு. பிறகு 1997-ல் தொடங்கப்பட்ட படம், 2000-ல் தான் முடிஞ்சது.
அதற்கிடைப்பட்ட காலத்தில் பொருளாதார ரீதியான சவால்கள் அவருக்கு வந்திருக்கும். விக்ரம் சந்தித்த அத்தனை அவமானங்களும் எனக்குத் தெரியும். ஏன்னா, அவருடைய நெருங்கிய நண்பர் நான்தான்,” எனப் பகிர்ந்திருக்கிறார்.