இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “பிளடி பெக்கர்’ (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது என்றும், `அந்த தொகையை திரும்பக் கொடுக்கத் தேவையில்லை என்ற ஒப்பந்த முறையிலேயே வியாபாரம் நடந்திருக்கிறது என்றாலும், 5 கோடியை கொடுக்க நெல்சன் முன் வந்துள்ளார்’ என்றும் டிஜிட்டல் உள்ளிட்ட இதர உரிமைகளில் அவருக்கு லாபம் கிடைத்துள்ளது என்றும் ஒரு செய்தி கோடம்பாக்க வட்டாரத்தில் பரவி வருகிறது.