Cibi Chakravarthy: 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்குத் திருமணம் | don movie director cibஇ chakrvarthy marriage

Cibi Chakravarthy: ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்குத் திருமணம் | don movie director cibஇ chakrvarthy marriage


இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் வர்ஷினி என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு சிபி சக்ரவர்த்தி சிவ கார்த்திகேயன் உட்பட தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு வைத்த பேச்சுலர் பார்ட்டியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. நேற்றைய தினம் நடைபெற்ற திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பால சரவணன், இயக்குநர்கள் அட்லீ, ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன் உட்படப் பலர் கலந்துக் கொண்டு இவர்கள் இருவரையும் வாழ்த்தியிருக்கிறார்கள்.

“திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள் சிபி ப்ரோ. உங்கள் அன்பான மனசுக்கு எப்பவும்போல இன்னும் மாபெரும் வெற்றிகளை அடைவீங்க ப்ரோ!” என இவர்கள் இருவரையும் வாழ்த்தி நடிகர் பால சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

‘டான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி நீண்ட நாட்களாகச் சமூக வலைத்தளப் பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த தகவலின்படி … மீண்டும் இருவரும் இணைவது உறுதிதானாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *