Cinema Roundup: `கூலி' படத்தில் எஸ்.கே?; ஒன்றிணையும் இயக்குநர்கள் -இந்த வார டாப் சினிமா தகவல்கள்

Cinema Roundup: `கூலி' படத்தில் எஸ்.கே?; ஒன்றிணையும் இயக்குநர்கள் -இந்த வார டாப் சினிமா தகவல்கள்


இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இயக்குநர்களின் சங்கமம்!

`ஓ மை கடவுளே’ திரைப்படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம் `டிராகன்’. இந்த `டிராகன்’ திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் என மூன்று இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்களாம். இந்த அறிவிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து `My lovable directors’ எனப் பதிவிட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதுமட்டுமல்ல, யூ-ட்யூப்பை கலக்கிக் கொண்டிருக்கும் `விஜே சித்து விலாக்ஸ்’ சித்து மற்றும் ஹர்ஷத்தும் படத்தில் நடித்து வருகிறார்களாம். இப்படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

பிரபாஸ் படத்தில் டான் லீ!

பிரபாஸ் நடிக்கும் `சலார் 2′ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தில் கொரியன் நடிகர் டான் லீ நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டதை தொடர்ந்து இதனை உறுதி செய்யும் வகையில் இந்தப் படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தம்ப்ஸ் அப் போட்டிருக்கிறார் டான் லீ. இந்தாண்டு இவர் சந்தீப் ரெட்டி வாங்காவின் `ஸ்ப்ரிட்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் பேசப்பட்டது. இந்தப் படத்திலும் கதாநாயகனாக பிரபாஸ்தான் நடிக்கவிருக்கிறார். டான் லீ `டிரெயின் டு பூசான்’ திரைப்படத்தின் மூலம் உலகளவில் பயங்கர ஃபேமஸ் ஆனார்.

`கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன்!

ரஜினி நடிக்கும் `கூலி’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. டோலிவுட்டிலிருந்து நாகர்ஜூனா, சாண்டல்வுட்டிலிருந்து உபேந்திரா, மல்லுவுட்டிலிருந்து செளபின் சாஹிர் எனப் பலரும் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. `கோட்’ திரைப்படத்தில் நடித்தது போலவே `கூலி’ படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ செய்கிறார். அவர் `கூலி’ படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றிருக்கிறார் என்ற தகவல்களெல்லாம் பேசப்பட்டு வந்தது.

FT AolWaUAQhwon Thedalweb Cinema Roundup: `கூலி' படத்தில் எஸ்.கே?; ஒன்றிணையும் இயக்குநர்கள் -இந்த வார டாப் சினிமா தகவல்கள்
SK and Rajini

இந்த தகவல்களுக்கு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார் எஸ். கே. அவர், ” நான் லோகேஷ் கனகராஜை சந்திக்க சென்றிருந்தேன். சொல்லப்போனால், `கூலி’ படப்பிடிப்பு என்னுடைய வீட்டிற்கு எதிரிலேயே நடைபெற்றது. கூலி என்னுடைய தலைவர் படம். அதுதான் படத்திற்கும் எனக்கும் இருக்கும் கனெக்ஷன். மற்றபடி படத்தில் நான் நடிக்கவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

`பச்சை துரோகி’ – விக்ரம் சுகுமாறன் ஆவேசம்!

மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்ரம் சுகுமாறன். இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கத்தில் கடந்தாண்டு `ராவணக் கோட்டம்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது அவர் அறிமுகம் செய்த நடிகரே அவருக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆவேசமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது பற்றி அவர், “மதயானை கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறுபட வாய்ப்பு வரவில்லை … நானும் யாரும் அழைக்கவில்லை என்று தான் நினைத்தேன் ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன்.. பச்சை துரோகி… என் எதிரிக்கு கைக்கூலி யாக செயல்பட்டிருக்கிறான்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Thedalweb Cinema Roundup: `கூலி' படத்தில் எஸ்.கே?; ஒன்றிணையும் இயக்குநர்கள் -இந்த வார டாப் சினிமா தகவல்கள்
SK with Sibi Chakravarthy

சிவகார்த்திகேயன் 24:

சிவகார்த்திகேயனை வைத்து `டான்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிபி சக்ரவர்த்தி. இவர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்தவர். `டான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் எனப் பேசப்பட்டு வந்தது. அந்தத் தகவலை தற்போது சிவகார்த்திகேயனே உறுதிபடுத்தியிருக்கிறார். `அமரன்’ ரிலீஸுக்குப் பிறகும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்படியான ப்ரோமோஷன் நிகழ்வு ஒன்றில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கும் திரைப்படத்திற்குச் செல்கிறாராம் எஸ்.கே.





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *