ஜாக்கி சான் கம்பேக்!
ஜாக்கி சான் நடிப்பில் ‘ஏ லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் சீனாவில் வெளியாகியிருந்தது. 2005-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி மித்’ திரைப்படத்தின் சீக்குவல்தான் இத்திரைப்படம். ‘தி மித்’ திரைப்படத்தின் இந்திய ரசிகர்களுக்காக இந்த படம் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது.
வேட்டையன் கதாபாத்திரங்கள்!
‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் டீஸர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயரை படக்குழு ஒவ்வொன்றாக அறிவித்திருக்கிறது. அதில் அமிதாப் பச்சன் இந்த படத்தில் சத்யதேவ் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரை தாண்டி ஃபகத் பாசில் – பேட்ரிக்காகவும், ரானா – நட்ராஜாகவும், மஞ்சு வாரியர் – தாராவாகவும், துஷாரா – சரண்யாவாகவும், ரித்திகா சிங் – ரூபாவாகவும் களமிறங்கவுள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU