Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள்

Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள்


இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மம்முட்டியுடன் கெளதம் மேனன்!

மலையாளத்தில் மம்முட்டியை வைத்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். மம்முட்டியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். கெளதம் மேனன் இதற்கு முன்பு ‘டிரான்ஸ்’ போன்ற மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்திற்கு சென்று ஒரு படத்தை இயக்குவது இதுவே முதல் முறை. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் ஷெர்லாக் ஹோம்ஸ், 007 படத்தின் போஸ்டர்களெல்லாம் ஓட்டப்பட்டிருக்கிறது.

GW2M6q6XkAApocv Thedalweb Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள்
Mamooty – Gautam Menon Movie

இப்படியான விஷயங்களை வைத்து ரசிகர்கள் டீகோட் செய்து இது டிடெக்டிவ் வடிவிலான திரைப்படமாகத்தான் இருக்கும் எனப் பதிவிட்டு வருகிறார்கள். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்குப் பிறகு இப்படத்திற்காக இசையமைப்பாளர் டர்புகா சிவாவுடன் இணைந்திருக்கிறார் கெளதம் மேனன்.

விளம்பரத்தை மறுத்த மாதவன்!

உச்ச நட்சத்திரங்களான மகேஷ் பாபு, அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உட்பட பலர் பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பது மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும் என்பதை எண்ணி சில நடிகர்களும் மறுத்திருக்கிறார்கள். அது போல நடிகர் மாதவனும் இது போன்ற பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை மறுத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பான் மசாலா நிறுவனம் மாதவனை விளம்பரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்ற விளம்பரத்தில் நடித்தால் ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் எனக் கூறி அந்த விளம்பரத்தில் நடிக்காமல் மறுத்திருக்கிறார்.

cinema%20Roundup Thedalweb Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள்
Madhavan & Vettaiyan

வேட்டையன் சிங்கிள்!

ரஜினி நடித்திருக்கிற ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. இதன் முன்னோட்ட காணொளியை படக்குழுவினர் வெளியிட்டு ‘இப்பாடலை பாடியிருக்கும் லெஜெண்டைக் கண்டிபிடியுங்கள்! ‘ என பதிவிட்டிருந்தது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு கொண்டு வந்து இப்பாடலை தயார் செய்திருக்கிறார்கள் எனப் பேசப்பட்டு வருகிறது.

வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்!

இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘பஞ்சாயத்’ வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது ‘தலைவெட்டியான் பாளையம்’. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் அபிஷேக் குமார், சேத்தன் தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.

cinema%20Roundup%20(1) Thedalweb Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள்
Goli Soda and Thalaivettiyaan Palayam Web series

கோலி சோடா வெப் சீரிஸ்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘கோலி சோடா’. இதன் வெற்றியை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது ‘கோலி சோடா’ களத்தை மையப்படுத்தி ‘கோலி சோடா – தி ரைசிங்’ என்ற வெப் சீரிஸை எடுத்திருக்கிறார் விஜய் மில்டன். இந்த வெப் சீரிஸ் செப்டம்பர் 13-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. ‘கோலி சோடா’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் இதிலும் நடித்திருக்கிறார்கள். இவர்களை தாண்டி ஷ்யாம், சேரன் ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *