தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.20) திரையுலகில் சில அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
இயக்குநராகும் விஷால்
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே விஷால் மற்றும் படக்குழுவுக்கும், ரவி அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் எஞ்சிய படப்பிடிப்பை விஷால் இயக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.