தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனரான டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். 2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான டில்லி பாபு “மரகத நாணயம்’, ‘ராட்சதன்’, ‘பேச்சுலர்’, ‘ஓ மை கடவுளே’, ‘கள்வன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.
இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. ’வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்தார். இந்நிலையில் 50 வயதுடைய டில்லி பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும், டில்லி பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாலை 4.30 மணியளவில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது என்று கூறப்படுகிறது.